இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையால் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது தற்போது இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடந்து வருகிறது.

India vs Pakistan: வெளியே, உள்ளே போட்டு ரோகித் சர்மாவை கிளீன் போல்டாக்கிய ஷாஹீன் அஃப்ரிடி!

இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாகளுடன் களமிறங்கியுள்ளது. அதோடு, 2 ஆல் ரவுண்டர்களுடன் இன்றைய போட்டியில் விளையாடுகிறது. அதன்படி இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

India vs Pakistan: விளையாட ஆரம்பித்த மழை: இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு!

இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெறவில்லை. மாறாக ஆல் ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் அணியில் இடம் பெற்றுள்ளார். இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி டாஸ் போடுவடில் எந்த சிக்கலும் ஏற்படாத நிலையில், தற்போது போட்டியின் நடுவில் மழை குறுக்கீடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மைதானம் முழுவதும் தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.

தற்போது வரையில் இந்திய அணி 11.2 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 51 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ரோகித் சர்மா 11 ரன்னிலும், விராட் கோலி 4 ரன்னிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சுப்மன் கில் 6 ரன்னுடனும், இஷான் கிஷான் 2 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். இதற்கு முன்னதாக போட்டியின் 4.2 ஆவது ஓவரின் போது மழை குறுக்கீடு ஏற்பட்டது. அப்போது இந்தியா விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்தது.

Asia Cup 2023, India vs Pakistan: இரவு பதற்றமாக இருந்தேன், தூங்க முடியவில்லை – ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்!

இன்றைய போட்டி தொடங்கும் போதிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. போட்டியின் நடுவே மழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டிருந்தது. இன்றைய நிலவரப்படி 60 சதவிகித மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், 98 சதவிகிதம் வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

பிற்பகல் நிலவரப்படி வானம் தெளிவாக காணப்படுகிறது. எனினும், சூரியன் அஸ்தமனத்திற்குப் பிறகு இரவு 7 மணி முதல் மழைக்கான வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அது மிதமானது முதல் மிக கன மழை வரையில் பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to load tweet…