அதிக சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்ததன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரரான ஸ்டீவ் ஸ்மித் சாதனையை சதன் செய்துள்ளார்.

Rohit Sharma hit his 10th Test Hundred against West Indies at Dominica

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள ரோசோ மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஆனால், 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் இருவரும் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 229 ரன்கள் குவித்துள்ளது. அதிலேயும், இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா 221 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 10ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்.. பதக்கங்களை அடுக்கும் இந்தியா - 3 தங்கம், 3 வெண்கலத்துடன் தொடர் முன்னேற்றம்!

அதோடு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் தனது 44ஆவது சதத்தை நிறைவு செய்து ஆஸ்திரேலிய வீரரான ஸ்டீவ் ஸ்மித் 44 சதங்கள் சாதனையை சமன் செய்துள்ளார். மேலும், டேவிட் வார்னர் 45 சதங்களும், ஜோ ரூட் 46 சதங்களும், விராட் கோலி 75 சதங்களுடன் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். இந்த டெஸ்ட் போட்டியில் 63 ரன்கள் எடுத்திருந்ததன் மூலமாக ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் 3500 ரன்களை கடந்துள்ளார். தற்போது அவர் 51 டெஸ்ட் போட்டிகளில் 3540 ரன்கள் எடுத்துள்ளார்.

95 ரன் எடுத்தும் ஜெயிச்சு கொடுத்த மகளிர் டீம் இந்தியா: ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா 3, 3 விக்கெட்டுகள்!

 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடக்க வீரர்கள் அடித்த அதிகபட்ச ரன்கள்:

209* - ரோகித் சர்மா – யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ரோசோவ் – 2023

201 - விரேந்திர சேவாக் – சஞ்சய் பங்கர் – மும்பை – 2002

159 – விரேந்திர சேவாக் – வாசீம் ஜாஃபர் – கிராஸ் இஸ்லெட், 2006

153 – சுனில் கவாஸ்கர் – சேத்தன் சௌகான் – மும்பை – 1978

136 – சுனில் கவாஸ்கர் – அன்ஷுமான் கெய்க்வாட், கிங்ஸ்டன் - 1976

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios