பயிற்சியின் போது ரோகித் சர்மா காயம்: கையில் பேண்டேஜ் போட்டுக் கொண்டு மீண்டும் பயிற்சி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை நடக்க உள்ள நிலையில், பயிற்சியின் போது ரோகித் சர்மாவுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

Rohit Sharma has got injured in his left thumb while batting at the nets for WTC Final

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடக்கும் இந்தப் போட்டி நாளை பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிய U20 தடகளப் போட்டியில் டெகாத்லான் பிரிவில் இந்திய வீரர் சுனில்குமார் தங்கம்!

இதில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது, ரோகித் சர்மாவிற்கு இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இடது கை பெருவிரலில் ஏற்பட்ட காயத்திற்கு பேண்டேஜ் அணிந்து கொண்டார். எனினும், அவர் பயிற்சியில் தீவிரமாக இருந்தார். காயத்தையும் பொருட்படுத்தாமல் அவர் பயிற்சி மேற்கொண்டு வந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு கையில் அணிந்து கொண்ட பேண்டேஜ்ஜை நீக்கியுள்ளார்.

உமேஷ் யாதவ்வா? அஸ்வினா? என்ன பிளான்? இந்தியா பிளேயிங் 11!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக ரோகித் சர்மா கையில் காயம் ஏற்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து மைதானம் மோசமாக இருப்பதாக கூறியிருந்தார். இதில், இந்திய வீரர்கள் காயம் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக அவர் கூறியிருந்தார். இங்கிலாந்து சூழல் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக இருப்பதால், இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆஸி, முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இப்படி இருந்தால் எப்படி தான் விளையாடுவது? – மைதானம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து!

இந்திய வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட், இஷான் கிஷான்

ஸ்டேண்ட் பை பிளேயர்ஸ்: சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார்.

இதெல்லாம் திடீரென்று நிகழ்ந்த சம்பவம்: முகமது கைஃப் பெருமிதம்!

ஆஸ்திரேலிய வீரர்கள்:

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலந்து, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், டோட் முர்ஃபி, மைக்கேல் நேசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்

ஸ்டேண்ட் பை பிளேயர்ஸ்: மிட்ஷெல் மார்ஷ், மேத்யூ ரென்ஷா

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios