இஷான் கிஷான் அரைசதம் அடிக்கும் வரை காத்திருந்து டிக்ளேர் செய்த ரோகித் சர்மா!

இந்தியா தனது 2ஆவது இன்னிங்ஸில் 181 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்துள்ளது.

Rohit Sharma declared after waiting for Ishan Kishan to score his fifty during WI vs IND 2nd Test Match

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் உள்ள போர் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயீன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் எடுத்தது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57, ரோகித் சர்மா 80, விராட் கோலி 121, ரவீந்திர ஜடேஜா 61 மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 56 ரன்கள் எடுத்தனர்.

ACC Mens Emerging Asia Cup 2023 Final: தேசிய கொடியில் மோடின்னு எழுதி காண்பித்த ரசிகர்களால் சர்ச்சை!

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில் கேப்டன் பிராத்வைட் 75 ரன்னும், சந்தர்பால் டெகனரைன் 33 ரன்னும், கிர்க் மெக்கென்ஸி 32 ரன்னும், ஜெர்மைன் பிளாக்வுட் 20 ரன்னும் எடுத்தனர். 3ஆம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. இதில், ஜேசன் ஹோல்டர் 11 ரன்னுடனும், அலிக் அதனாஸ் 37 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பழிக்கு பழி வாங்கி தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியனான பாகிஸ்தான் ஏ: இறுதிப் போட்டியில் இந்தியா ஏ தோல்வி!

இதையடுத்து 4ஆம் நாள் போட்டி கொஞ்சம் முன்னதாகவே தொடங்கப்பட்டது. ஹோல்டர் மற்றும் அதனாஸ் இருவரும் இன்றைய போட்டியை தொடங்கினர். இதில் அதனாஸ் ரன் ஏதும் எடுக்காமல் முகேஷ் குமார் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். இதே போன்று ஹோல்டர் கூடுதலாக 4 ரன்கள் சேர்த்த நிலையில், சிராஜ் பந்தில் இஷான் கிஷானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

WI vs IND 2nd Test: 26 ரன்னுக்கு 5 விக்கெட்; வெஸ்ட் இண்டீஸ் 255க்கு ஆல் அவுட்; முகமது சிராஜ் 5 விக்கெட்!

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே வெஸ்ட் இண்டீஸ் கூடுதலாக 26 ரன்கள் சேர்ப்பதற்குள்ளாக எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், இந்திய அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக முகேஷ் குமார் 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன் மூலமாக 183 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா தனது 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவருமே தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ரோகித் சர்மா 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால், அதற்கு முன்னதாக 2 முறை கேட்ச் வாய்ப்பிலிருந்து தப்பியுள்ளார்.

பட்டைய கிளப்பிய பாகிஸ்தான் ஏ – 352 ரன்கள் குவிப்பு; பழிக்கு பழி கன்ஃபார்ம்!

இவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 38 பந்துகளில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இதில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் அதிரடியாக ஆடினார். அவர் 33 பந்துகளில் 50 ரன்கள் கடந்தார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து 2 சிக்ஸர்கள் பறக்க விட்டார்.

இஷான் கிஷான் அரைசதம் அடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருந்த ரோகித் சர்மா அவர் அரைசதம் அடித்ததும் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இறுதியாக இந்தியா தனது 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. இதன் மூலமாக இந்தியா 364 ரன்கள் முன்னிலை பெற்றது. அதன் பிறகு 365 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் குவித்துள்ளது. இதில், கிரேக் பிராத்வைட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். கிர்க் மெக்கென்ஸி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

புறக்கணிக்கப்பட்ட பாபர் அசாம், இது வளர வேண்டிய நேரம்: ஐசிசியை சாடிய சோயப் அக்தர்!

டெகனரின் சந்தர்பால் 24 ரன்னுடனும், ஜெர்மைன் பிளாக்வுட் 20 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு இன்னும் 289 ரன்கள் எடுக்க வேண்டும். இந்தியா 8 விக்கெட்டுகள் கைப்பற்றினால் 2ஆவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும். இந்தப் போட்டி டிரா ஆனாலும் இந்தியா தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios