Asianet News TamilAsianet News Tamil

சிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா அறிவுரை!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா அறிவுரையும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
 

Rohit Sharma convey his  message to the MI Womens team ahead of the WPL final
Author
First Published Mar 26, 2023, 7:02 PM IST

கடந்த 4ஆம் தேதி தொடங்கப்பட்ட மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் இன்று நடக்கும் இறுதிப் போட்டியுடன் முடிவடைகிறது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இன்னும் சற்று நேரத்தில் இந்தப் போட்டி தொடங்குகிறது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு, ஆண்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

பும்ரா மட்டும் இல்லையென்றால் இந்தியா உலகக் கோப்பை கைப்பற்ற வாய்ப்பே இல்லை - இலங்கை வீரர் அதிரடி கருத்து!

இறுதிப் போட்டிக்கு சென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கடந்த 4 வாரங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான ஆட்டத்தை நான் பார்த்து வருகிறேன். இது இறுதிப் போட்டி. ஆகையால்,  நல்லா ஜாலியாக இருங்கள். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடருக்கு முன்னதாக புதிய டாட்டூ போட்டுக் கொண்ட விராட் கோலி: வைரலாகும் புகைப்படம்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் நாட் ஷிவர் பிரண்ட் அதிக ரன்கள் குவித்துள்ளார். அவர், 272 ரன்கள் வரை குவித்துள்ளார். ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணியில் மெக் லேனிங் 310 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் ஷைகா இஷாக் 15 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக 11 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரன் அவுட் ஆனபோதும் ஜிங் பெயில்ஸ் பேட்டரி பிரச்சனையால் தப்பித்த கருணாரத்னே!

Follow Us:
Download App:
  • android
  • ios