ஐபிஎல் தொடருக்கு முன்னதாக புதிய டாட்டூ போட்டுக் கொண்ட விராட் கோலி: வைரலாகும் புகைப்படம்!
விராட் கோலி தனது உடல் முழுவதிலும் டாட்டூ போட்டுள்ளார். அப்படி என்னென்ன டாட்டூ போட்டிருக்கிறார் தெரியுமா? கடவுளின் கண், ஜப்பானின் சாமுராய், 175, 269, அம்மாவின் பெயர், அப்பாவின் பெயர், சிவன், மடாலயம், ஸ்கார்பியோ, ஓம், பழங்குடி என்று பலவிதமான டாட்டூகள் போட்டுள்ளார். தற்போது புதிதாக ஒரு டாட்டூவையும் போட்டுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களால் 'கிங் கோலி' என்று செல்லமாக அழைக்கப்படுபவர் விராட் கோலி. விளையாட்டு வீரர்களுக்கே உரிய ஃபிட்னஸ் விஷயங்களில் அக்கறை காட்டுவதுடன், விளம்பரங்களில் நடிப்பதாலும், உடல் அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அப்படி கட்டுக்கோப்பான உடலை கொண்டிருக்கும் விராட் கோலி தனது உடல் முழுவதிலும் டாட்டூ போட்டுள்ளார். அப்படி என்னென்ன டாட்டூ போட்டிருக்கிறார் தெரியுமா? கடவுளின் கண், ஜப்பானின் சாமுராய், 175, 269, அம்மாவின் பெயர், அப்பாவின் பெயர், சிவன், மடாலயம், ஸ்கார்பியோ, ஓம், பழங்குடி என்று பலவிதமான டாட்டூகள் போட்டுள்ளார். தற்போது புதிதாக ஒரு டாட்டூவையும் போட்டுள்ளார்.
விருச்சிகம் ராசி:
கோலியின் ராசி விருச்சிகம் என்பதை குறிக்கிறது.
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்திய வீரர் ருத்ராங்ஷ் பாட்டீல் வெண்கல பதக்கம்!
ஓம்
ஆன்மீகத்தின் அடையாளம். முழு பிரபஞ்சத்திலும் நிலையான விஷயம். ஆகையால் நான் இருக்கும் இடத்தில் இந்த ஓம் சின்னமும் இருக்க வேண்டும் என்று கருதி ஓம் சின்னத்தை கையில் டாட்டூவாக போட்டுள்ளார்.
சிவன்:
விராட் சிவனை வழிபடுபவர். எனவே, அவர் மானசரோவர் ஏரிக்கு அருகில் உள்ள கைலாஷ் மலையில் சிவபெருமானின் தியான உருவத்துடன் டாட்டூ குத்தியுள்ளார்.
அம்மாவின் பெயர் சரோஜ்:
விராட் கோலி தனது அம்மாவின் பெயரான சரோஜ் என்பதை இடது ஆர்ம்ஸில் போட்டுள்ளார்.
4ஆவது இடத்துல ஃபார்முல இல்லாத ஒருத்தர போய் 7ஆவது இடத்துல இறக்கலாமா? அஜய் ஜடேஜா சரமாரியாக கேள்வி!
மடாலயம்:
இது அமைதி மற்றும் சக்தியின் அடையாளமாக கருதப்படுகிறது.
175:
இது விராட் கோலியின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப் நம்பர். இதனை இடது கையின் ஆர்ம்ஸில் போட்டுள்ளார்.
பழங்குடி:
ஆக்கிரமிப்பின் சின்னம் என்று பொருள். கோலி அதே மாதிரி கிரிக்கெட் விளையாடுகிறார். எதிராளிகளுக்கு ஒரு அங்குலம் கூட கொடுக்க மாட்டார்.
கடவுளின் கண்:
கடவுளின் கண். எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டிருக்கும். வாழ்க்கையின் சாராம்சத்தையும், மனிதர்களாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும், நமது இறுதி இலக்கு என்ன என்பதையும் புரிந்து கொள்ள வைக்கிறது. இதனை இடது தோள்பட்டையில் போட்டுள்ளார்.
269:
இந்த எண்கள் எப்போதும் விராட் கோலியுடன் இருக்கும். ஏனென்றால், 200 ஆண்டுகளுக்கு பிறகு அட்டவணையைத் திரும்பிப் பார்க்கும்போது, இந்த எண்களுக்கு முன்னால், விராட் கோலியின் பெயர் இருக்கும். ஆதலால் அதனை டாட்டூவாக இடது கையில் போட்டுள்ளார்.
அப்பாவின் பெயர் பிரேம்:
இதே போன்று தனது தந்தையின் பெயரான பிரேம் என்பதை ஹிந்தியில் போட்டுள்ளார். அந்த பெயரை இடது கையில் போட்டுள்ளார்.
ஜப்பானிய சாமுராய்:
இது விராட் கோலிக்கு பிடித்தமான டாட்டுக்களில் ஒன்று. சாமுராய்கள் நவீன காலத்திற்கு முந்தைய ஜப்பானின் போர் வீரர்களாக சித்தரிக்கப்பட்டனர். அவர்கள் எஜமானருக்கு விஸ்வாசம், சுய ஒழுக்கம் மற்றும் மரியாதைக்குரிய, நெறிமுறை நடத்தை ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்க்கையை வாழ நம்பினர். இடது கையின் ஆர்ம்ஸில் இந்த டாட்டூவை போட்டுள்ளார்.
விராட் கோலி புதிய டாட்டூ
தற்போது புதிதாக ஒரு டாட்டூ ஒன்றையும் வரைந்துள்ளார். வலது கையில் போட்டுள்ள இந்த டாட்டூ பூ போன்று தெரிகிறது.