இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா இன்று தேசிய மகள்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், தனது அன்பு மகளுடன் இணைந்து மகள்கள் தினம் கொண்டாடியுள்ளார்.

தேசிய மகள்கள் தினம் என்பது மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நிகழ்வு. அந்த வகையில், செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று மகள்களை கௌரவிப்பதற்கும் பாராட்டுவதற்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவே சொல்லலாம்.

IND vs AUS: 2ஆவது ஒரு நாள் போட்டியில், இந்தியா பிளேயிங் 11 எப்படி இருக்கும்?

மகள்கள் தான் நம் வாழ்வில் விலை மதிப்பற்ற செல்வம். அவர்களுக்கு நன்றி தெரிப்பதற்கு இந்த நாள் ஒரு சிறப்பான தருணமாக கருதப்படுகிறது. அந்த வகையில், எந்தெந்த கிரிக்கெட் பிரபலங்கள் இன்று மகள்கள் தினத்தை கொண்டாடியுள்ளனர் என்று பார்க்கலாம்.

Hangzhu 2023 Rowing: படகுப் போட்டியில் இந்தியாவிற்கு 2 வெள்ளி, 2 வெண்கலம்: பதக்க பட்டியலில் 2ஆவது இடம்!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மகள் சமைரா உடன் இன்று மகள்கள் தினத்தை கொண்டாடியுள்ளார். மேலும், தனது மகளை மடியில் வைத்துக் கொண்டு பாடம் கற்றுக் கொடுக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போன்று ரோகித் சர்மா தனது பெற்றோருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Hangzhou 2023: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மகளிர் டீம் இந்தியா; பதக்கம் உறுதி!

Scroll to load tweet…

கிரிக்கெட்டர்களும் அவர்களது மகள்களும்:

  • எம்.எஸ்.தோனி – ஜிவா தோனி
  • ரோகித் சர்மா – சமைரா
  • சுரேஷ் ரெய்னா - கிரேசியா
  • கவுதம் காம்பீர் – அஜீன்
  • சவுரவ் கங்குலி – சனா கங்குலி
  • ஹர்பஜன் சிங் – ஹினாயா சிங்
  • ஸ்ரீசாந்த் - சான்விகா நாயர்
  • விராட் கோலி – வாமிகா கோலி
  • அஜிங்க்யா ரகானே – ஆர்யா

View post on Instagram

Scroll to load tweet…