சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ரோகித் சர்மா 13 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் ஆடியது. இதில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது.
ஒரு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பூஜ்ஜியம்: பாக், முன்னாள் வீரர் பாசித் அலி!
பின்னர் இந்தியா முதல் இன்னிங்ஸில் ஆடியது. இதில், இந்தியா 296 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அஜிங்கியா ரஹானே 89 ரன்களும், ஷர்துல் தாக்கூர் 51 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 48 ரன்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா மீண்டும் தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், அலெக்ஸ் கேரி அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். மார்னஷ் லபுஷேன் 41 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 34 ரன்னும் எடுத்தனர்.
பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை 2023 ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!
இறுதியாக ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலமாக இந்தியாவிற்கு 443 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.
ரோகித் சர்மா தொடக்க வீரராக சர்வதேச போட்டிகளில் 13,000 ரன்களை கடந்துள்ளார். பதினோறாவது வீரராக ரோகித் சர்மா 13 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்னதாக வீரேந்திர சேவாக் 15,758 ரன்களும், சச்சின் டெண்டுல்கர் 15,335 ரன்களும் எடுத்துள்ளனர்.
மைதானத்திலேயே அந்தர் பல்டி அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்: வைரலாகும் வீடியோ!
தொடக்க வீரராக: ரோகித் சர்மா
டெஸ்டில் 1826 ரன்களும், ஒரு நாள் கிரிக்கெட்டில் 7807 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 3372 ரன்களும் எடுத்துள்ளார். இதில், 38 சதமும், 59 அரைசதமும் அடங்கும்.
