Wimbledon and Rohit Sharma: 2024 சீசனில் 4.4 மில்லியன் லைக்குகள் பெற்ற ரோகித் சர்மாவின் விம்பிள்டன் போஸ்ட்!
விம்பிள்டன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிடப்பட்ட ரோகித் சர்மாவின் புகைப்படம் ஒன்று 4.4 மில்லியன் லைக்குகள் குவித்துள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணியானது 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தது. இதையடுத்து டிராபியோடு நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மும்பையில் வெற்றி அணிவகுப்பில் கலந்து கொண்ட இந்திய அணி வீரர்களுக்கு வான்கடே ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடிய டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியுடன் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.
இதையடுத்து லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் தொடரின் கடைசி சில சுற்று போட்டிகளில் இடம் பெற்றிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விம்பிள்டன் தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டிருந்தது. விம்பிள்டன் பதிவிட்ட ரோகித் சர்மாவின் அந்தப் புகைப்படம் 4.4 மில்லியன் லைக்குகள் குவித்து இந்த 2024 சீசனில் அதிக லைக்குகள் பெற்ற புகைப்படமாக திகழ்ந்துள்ளது.
விம்பிள்டன் இறுதிப் போட்டியில் செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் இருவரும் மோதினர். இறுதியாக அல்காரஸ் 6-2, 6-2 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி தொடர்ந்து 2ஆவது முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டியில் ஜோகோவிச் வெற்றி பெற்றிருந்தால் 8ஆவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றிருப்பார். அதோடு 25ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் வென்றிருப்பார். 25ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் வெல்வது என்பது ஒவ்வொருவருக்கும் கனவு.
தனிப்பட்ட காரணம் தொடர்பாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பாண்டியா விலகல்!
ஆனால், அந்த கனவை தற்போது ஜோகோவிச் கோட்டைவிட்டுள்ளார். எனினும் அல்காரஸ் தொடர்ந்து 2ஆவது முறையாக விம்பிள்டன் வென்று சாதனை படைத்துள்ளார். சாம்பியனான அல்காரஸிற்கு ரூ.265 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இந்த தொடருக்கு மட்டும் ரூ.500 கோடி பரிசுத் தொகை அறிவித்திருக்கின்றனர். கடந்த ஆண்டும் இதே போன்று தான் இருவரும் இறுதிப் போட்டியில் மோதினர். இந்தப் போட்டியில் அல்காரஸ் முதல் முறையாக விம்பிள்டன் டிராபி கைப்பற்றி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Paris 2024 Olympics: பாரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற வீரர், வீராங்கனைகளின் முழு லிஸ்ட்!