Paris 2024 Olympics: பாரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற வீரர், வீராங்கனைகளின் முழு லிஸ்ட்!

பாரீஸில் வரும் 26 ஆம் தேதி ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இந்த தொடருக்கு பிவி சிந்து, நீரஜ் சோப்ரா ஆகியோர் உள்பட 113 விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

Full List of Athletes who are Qualified for Paris 2024 Olympics rsk

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 3ஆவது முறையாக ஒலிம்பிக் தொடர் நடைபெற இருக்கிறது. 1900 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில் ஒலிம்பிக் 2024 தொடர் நடைபெற இருக்கிறது. வரும் 26 ஆம் தேதி தொடங்கும் பாரீஸ் 2024 கோடைகால ஒலிம்பிக் தொடரானது ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் 2024 தொடரில் இந்தியா சார்பில் 66 வீரர்கள் மற்றும் 47 வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 113 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதன் தொடக்க விழாவில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து இந்திய மூவர்ண கொடியை ஏந்தி அணி வகுப்பு நடத்த உள்ளார். இதே போன்று தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான அஜந்தா சரத் கமலும் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி அணி வகுப்பு நடத்த உள்ளார்.

ஒலிம்பிக் 2024 இடம் பெறும் விளையாட்டுகள்:

இந்த ஒலிம்பிக் தொடரில் வில்வித்தை, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, பீச் வாலிபால், குத்துச்சண்டை, கேனோ, சைக்கிளிங் (ரோடு, டிராக், மவுண்டைன் பைக்), டைவிங், குதிரையேற்றம், ஃபென்சிங் (கத்தி சண்டை), கால்பந்து, கோல்ஃப், கைப்பந்து, ஹாக்கி, ஜூடோ, மராத்தான் நீச்சல், மாடர்ன் பெண்டாத்லான், ரிதம் ஜிம்னாஸ்டிக்ஸ், ரோயிங், ரக்பி செவன்ஸ், படகோட்ட போட்டி, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, டென்னிஸ், டிராம்போலின், டிரையத்லான், வாலிபால், தண்ணீர் பந்தாட்ட போட்டி, பளுதூக்குதல் மற்றும் மல்யுத்த ஆகிய விளையாட்டு போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

ஒலிம்பிக் 2024 போட்டிகள் நடைபெறும் இடங்கள்:

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் பாரீஸை சுற்றிலும் நடைபெற உள்ளது. இதற்காக ஸ்டேட் டி பிரான்ஸ், ரோலண்ட் கரோஸ் ஸ்டேடியம் மற்றும் சாம்ப்ஸ் எலிசீஸ் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும். ஒலிம்பிக் போட்டிக்கான முதல் சர்ஃபிங் போட்டி டஹிடியில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் இந்த தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 113 விளையாட்டு வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க…

தடகளம்:

அக்‌ஷ்தீப் சிங், விகாஷ் சிங், பர்ம்ஜீத் சிங் பிஸ்ட், பிரியங்கா கோஸ்வாமி, அவினாஷ் சப்லே, பருல் சௌத்ரி, ஜோதி யாராஜி, கிரண் பஹல், தஜிந்தர்பால் சிங் தூர், நீரஜ் சோப்ரா, அபா கதுவா, நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா, அன்னு ராணி, சர்வேஷ் குஷாரே, பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கர், முகமது அனாஸ் யஹிஜா, முகமது அஜ்மல், அமோஜ் ஜாகோப், சந்தோஷ் தமிழரசன், மிஜோ சாகோ குரியன், வித்யா ராமராஜ், ஜோதிகா ஸ்ரீ தண்டி, பூர்வம்மா, சுபா வெங்கடேசன், பிராச்சி, சுராஜ் பன்வர், ஜெஸ்வின் அல்ட்ரின், கிரண் பால்

வில்வித்தை:

தீரஜ் பொம்மதேவரா, தருணீப் ராய், பிரவீன் ஜாதவ், பஜன் கவுர், தீபிகா குமாரி, அங்கிதா பகத்

பேட்மிண்டன்:

எஸ் எஸ் பிரணாய், லக்‌ஷயா சென்,பிவி சிந்து, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி, அஸ்வினி போனப்பா.

குத்துச்சண்டை:

நிகத் ஜரீன், நிஷாந்த் தேவ், ப்ரீத்தி பவா, அமித் பாங்கல், லவ்லினா போரோஹைன், ஜெய்மின் லம்போரியா.

குதிரையேற்றம்:

அனுஷ் அகர்வாலா

கோல்ஃப்

சுபங்கர் சர்மா, அதிதி அசோக், திக்ஷா தாகர், ககஜீத் புல்லர்.

ஹாக்கி

பி.ஆர்.ஸ்ரீஜேஷ், ஹர்மன்ப்ரீத் சிங் (கேப்டன்), அமித் ரோகிதாஸ், ஜர்மன்ப்ரித் சிங், சுமித், சஞ்சய், ராஜ்குமார் பால், ஷம்ஷேர் சிங், மன்ப்ரீத் சிங், ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், அபிஷேக், சுக்ஜீத் சிங், லலித் குமார் உபாத்யாய், மந்தீப் சிங், குஜ்ரந்த் சிங்

ஜூடோ

துலிகா மான்

ரோயிங்:

பால்ராஜ் போவிங்

படகு போட்டி:

விஷ்ணு சரவணன், நேத்ரா குமணன்

நீச்சல்:

திநிதி தேசிங்கு, ஸ்ரீஹரி நடராஜ்

துப்பாக்கி சுடுதல்:

ராஜேஸ்வரி குமாரி, ஸ்ரேயாஷி சிங், அனந்த்ஜீத் சிங் நருகா, ரைசா தில்லான், மகேஷ்வரி சவுகான், சந்தீப் சிங், அர்ஜூன் பாபுதா, இளவேனில் வளறிவன், ஜஸ்வரி பிரதாப் சிங் தோமர், ஸ்வப்னில் குசலே, ரமிதா ஜிந்தால், சிஃப்ட் கவுர் சர்மா, அஞ்சும் மௌத்கில், அர்ஜூன் சீமா, சரப்ஜோத் சிங், ரிதம் சங்கவம், விஜய்வீர் சித்து, அனிஷ் பன்வாலா, ஈஷா சிங், மனு பாக்கர்

டேபிள் டென்னிஸ்:

சரத் கமல், மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா காமத், மானவ் தக்கர், ஹர்மீத் தேசாய்

டென்னிஸ்:

சுமித் நாகல், ரோகன் போபண்ணா, ஸ்ரீராம் பாலாஜி.

பளுதூக்குதல்:

மீராபாய் சானு, அமன் செஹ்ராவத், வினேஷ் போகட், அன்ஷூ மாலிக், நிஷா தஹியா, ரித்திகா ஹூடா, அண்டிம் பங்கல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios