ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஐபிஎல் புரோமோவிற்காக நடித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் லீக்காகியுள்ளது.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த ஆண்களுக்கான 16ஆவது ஐபிஎல் தொடர் வரும் 31 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. மொத்தம் 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றும் முயற்சியில் ஒவ்வொரு அணியும் தீவிரமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் இதுவரையில் ஒரு ஐபிஎல் சீசன் தொடரைக் கூட கைப்பற்றவில்லை. கடந்த ஆண்டு ஐபில் சீசனில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
எங்கேயோ போன வெற்றியை கையோடு கூட்டி வந்த கிரேஸ் ஹாரிஸ்: யுபி வாரியர்ஸ் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் வரும் ஏப்ரல் 25 மற்றும் மே 12 ஆகிய தேதிகளில் மோதுகின்றன. இந்த நிலையில், ஐபிஎல் விளம்பரத்திற்காக நடித்த ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஆன்லைனில் லீக்காகியுள்ளது. ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நடிக்கும் வீடியோவும், ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக நடிக்கும் வீடியோவும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கு ஆரம்பித்தாரோ அங்கேயே பிரியாவிடை பெற்ற சானியா மிர்சா: இவையெல்லாம் மகிழ்ச்சியின் கண்ணீர்!
இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய சீசன்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் மட்டும் 2ஆவது இடம் பிடித்தது. கடந்த ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
கேஎல் ராகுல் தப்பிச்சிட்டாரு, இல்லைன்னா கிரிக்கெட் வாழ்க்கையே காலியாகியிருக்கும்: ஸ்ரீகாந்த்!
