- Home
- Sports
- எங்கு ஆரம்பித்தாரோ அங்கேயே பிரியாவிடை பெற்ற சானியா மிர்சா: இவையெல்லாம் மகிழ்ச்சியின் கண்ணீர்!
எங்கு ஆரம்பித்தாரோ அங்கேயே பிரியாவிடை பெற்ற சானியா மிர்சா: இவையெல்லாம் மகிழ்ச்சியின் கண்ணீர்!
ஹைதராபாத்தில் நடந்த பிரியாவிடை போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய சானியா மிர்சா, நாட்டுக்காக உயர்மட்டத்தில் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவு தான். என்னால் அவ்வாறு செய்ய முடிந்தது என்றார்.

சானியா மிர்சா
கடந்த 1986 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்த சானியா மிர்சா, கடந்த 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் டென்னிஸ் விளையாட தொடங்கியுள்ளார்.
சானியா மிர்சா
கடந்த 20 ஆண்டுகள் வரையில் இந்தியாவின் சிறந்த டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, 2003 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் ஒற்றையர் பிரிவிக்கான தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்தார்.
சானியா மிர்சா
அவரது டென்னிஸ் வாழ்க்கை முழுவதும், இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட அதிக சம்பளம் வாங்கும் மிகவும் செல்வாக்கு மிக்க விளையாட்டு வீரர்களில் ஒருவராக தன்னை நிலைநாட்டிக் கொண்டார்.
சானியா மிர்சா டென்னிஸ் வாழ்க்கை
கடந்த 2007 ஆம் ஆண்டு வரையில் ஒற்றையர் பிரிவில் உலகின் தலை சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் 27ஆவது வீராங்கனையாக திகழ்ந்த சானியா மிர்சா மணிக்கட்டு பகுதியில் பெரியளவில் காயம் ஏற்பட்ட நிலையில், இரட்டையர் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
சானியா மிர்சா
இதுவரையில் ஒருமுறை கூட ஒற்றையர் பிரிவில் கிராண்ட் ஸ்லாம் டைட்டில் வென்றதில்லை. ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் என்று ஒவ்வொன்றிலும் 3, 2, 2, 4 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றார்.
சானியா மிர்சா
ஒரேயொரு முறை ஒலிம்பிக் போட்டியில் முதல் ரன்னராக வந்தார். ஆனால், கடந்த 2016 ஆம் ஆண்டு கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த கிராண்ட்ஸ்லாம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் வெற்றி வாகை சூடினார். முதல் இந்திய பெண் வீராங்கனை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வெற்றி பெற்று கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் என்ற சாதனையை படைத்தார்.
சானியா மிர்சா
இதே போன்று கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ், 2015 ஆம் ஆண்டு நடந்த விம்பிள்டன் மற்றும் யுஎஸ் ஓபன் ஆகிய கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் வெற்றி வாகை சூடினார்.
சானியா மிர்சா
தனது 6ஆவது வயது முதல் டென்னிஸ் விளையாட தொடங்கிய சானியா மிர்சா, 2003 ஆம் ஆண்டு முதல் சிறந்த தொழில்முறை வீராங்கனையாக மாறினார். தனது தந்தையின் பயிற்சியின் மூலமாக சிறந்த தொழில்முறை வீராங்கனையான சானியா மிர்சா, ஜூனியர் போட்டிகளில் 10 முறை ஒற்றையர் பிரிவிலும், 13 முறை இரட்டையர் பிரிவுகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
சானியா மிர்சா பிரியாவிடை போட்டி
கடந்த மாதம் துபாய் ஓபன் போட்டியுடன் சர்வதேச டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து தான் எங்கு டென்னிஸ் விளையாட ஆரம்பித்தாரோ அங்கேயே தனது டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்றார்.
20 வருட டென்னிஸ் வாழ்க்கை
ஹைதராபாத்தில் நேற்று பிரியாவிடை கண்காட்சி டென்னிஸ் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று லால் பகதூர் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தெலுங்கானா அமைச்சர்களான கே டி ராமா ராவ், வீ சீனிவாச கவுடு ஆகியோர் மட்டுமின்றி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், அசாருதீன், மலையாள நடிகர் துல்கர் சல்மான், சானியா மிர்சாவின் குடும்பத்தினர், நண்பர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சானியா மிர்சா டென்னிஸ் வாழ்க்கை
தனது கடைசி போட்டி மட்டுமின்றி பிரியாவிடை டென்னிஸ் போட்டி என்பதால் சானியா மிர்சா மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது எனது கடைசி டென்னிஸ் போட்டியில் உங்கள் அனைவரது முன்னிலையில் விளையாடுவதில் நான் ஆவலாக இருக்கிறேன்.
அதிக சம்பளம் வாங்கும் ஒரு வீராங்கனை
கடந்த 20 ஆண்டுகளாக என் நாட்டிற்காக விளையாடியது எனக்கு கிடைத்த கௌரவம். நாட்டுக்காக உயர்மட்டத்தில் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவு தான். என்னால் அவ்வாறு செய்ய முடிந்தது என்றார்.
சானியா மிர்சா
மேலும், பேசிக் கொண்டிருந்த அவர் இவையெல்லாம் மகிழ்ச்சியின் கண்ணீர் என்றார். இதைவிட பிரியாவிடையை நான் கேட்டிருக்கவே முடியாது. டென்னிஸூக்கு விடை பெற்றாலும், இந்தியா மற்றும் தெலுங்கானாவில் டென்னிஸ் உள்ளிட்ட பிற விளையாட்டுகளில் பங்கேற்பேன். டென்னிஸ் விளையாட்டை முன்னெடுத்துச் செல்ல தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.
சானியா மிர்சா டென்னிஸ் வாழ்க்கை
இதையடுத்து, கடைசி போட்டியில் சானியா மிர்சா பங்கேற்றார். அதன் பிறகு அப்போதைய தெலுங்கானா விளையாட்டுத்துறை அமைச்சர் வி ஸ்ரீனிவாஸ் கவுடு, சானியா மிர்சாவுக்கு பிரியாவிடை கொடுத்தார்.
சானியா மிர்சா
இதையடுத்து, கடைசி போட்டியில் சானியா மிர்சா பங்கேற்றார். அதன் பிறகு அப்போதைய தெலுங்கானா விளையாட்டுத்துறை அமைச்சர் வி ஸ்ரீனிவாஸ் கவுடு, சானியா மிர்சாவுக்கு பிரியாவிடை கொடுத்தார். சானியாவின் பிரியாவிடை போட்டியை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். அதில், ஒருவர் இளவரசி சானியா மிர்சா, நாங்கள் உங்களை திருமணம் செய்து கொள்கிறோம் என்ற எழுதிய வாசகம் கொண்ட பேனரை வைத்திருந்தார்.