ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் இடம் பெறாதது குறித்து முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்தியா வந் த ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்று வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது. இதையடுத்து நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இது குறித்து முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: பேட் கம்மின்ஸ் இல்லாத நிலையில், அவருக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

குஜராத் ஜெயிண்ட்ஸ்க்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்னும் 6 போட்டி தான் இருக்கு!

இந்தூர் மைதானம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மோசமான ஒரு அடையாளம். இந்தியாவில் யாரும் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்ப்பதில்லை. ஆமாம், இப்படியெல்லாம் மைதானம் இருந்தால் யார் தான் பார்ப்பார்கள். ஒவ்வொரு போட்டியும் மூன்று நாட்களில் முடிந்துவிடுகிறது. பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் என்றால் 5 நாட்கள் நடக்க வேண்டும். இதுதான் வரலாறு. ஆனால், இப்போது மக்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புவதில்லை. மாறாக, அவர்களது கவனம் முழுக்க ஐபிஎல் பக்கம் திரும்பிவிட்டது.

எங்கேயோ போன வெற்றியை கையோடு கூட்டி வந்த கிரேஸ் ஹாரிஸ்: யுபி வாரியர்ஸ் த்ரில் வெற்றி!

இவ்வளவு ஏன், நானே டெஸ்ட் கிரிக்கெட் பார்ப்பதில்லை. முதல் ஓவரிலேயே சுழற்பந் துக்கு சாதகமாக இந்த மைதானம் அமைந்து விடுகிறது. யாராலயும் பந்தை கணிக்க முடியாது. அதற்காக இந்தியா 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததை ஒரு போதும் நான் ஆதரிக்கவில்லை. கண்டிப்பாக 200 ரன்களுக்கு மேல் அடித்திருக்கலாம். அப்படி செய்யாதது இந்தியாவின் பேட்டிங் சரியில்லை என்று தான் சொல்ல முடியும். எப்போதும் போல அக்‌ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய 3 பேரும் தான் இந்திய அணியை காப்பாற்றி வருகிறார்கள். ஆனால், இன்று அவர்கள் சரியாக ஆடாதது இந்திய அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டி போட்டு சிக்சரும், பவுண்டரியுமா விளாசிய ஷெஃபாலி வர்மா, மேக் லேனிங் - டெல்லி கேபிடல்ஸ் 223 ரன்கள்!

புஜாரா சிறப்பாக ஆடினார். ஆனால், முதல் இன்னிங்ஸில் யாரும் அவ்வளவாக விளையாடவில்லை. கேஎல் ராகுலை நினைத்து சந்தோஷப்படுகிறேன். ஏனென்றால், அவர் இந்த மைதானத்தில் விளையாடவில்லை. ஒருவேளை இந்த மைதானத்தில் அவர் விளையாடியிருந்தால் சொற்ப ரன்களில் வெளியேறியிருப்பார். அதோடு, அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் முடிந்திருக்கும். பேட் மற்றும் பந்து இரண்டிற்கும் சமநிலை இர்க்கும் வகையில் தான் மைதானம் தயார் செய்ய வேண்டும். அப்படியில்லை என்றால், எந்த கொம்பானாலும் இது போன்ற மைதானங்களில் ரன் அடிக்க முடியாது. சுழலுக்கு சாதகமான இந்த மைதானத்தில் 7 விக்கெட் எடுப்பதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது என்று கூறியுள்ளார்.

எங்கு ஆரம்பித்தாரோ அங்கேயே பிரியாவிடை பெற்ற சானியா மிர்சா: இவையெல்லாம் மகிழ்ச்சியின் கண்ணீர்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 9ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.