Rishabh Pant: பேட்டிங் பயிற்சி செய்த ரிஷப் பண்ட்: வைரலாகும் வீடியோ!
கார் விபத்தில் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் தற்போது தனது பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளார்.
கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, எலும்பியல் மருத்துவரான டின்ஷாவின் மேற்பார்வையில் ரிஷப் பண்டிற்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
விராட் கோலி - எம்.எஸ்.தோனி: யார் ஸ்டைலிஷ் கிரிக்கெட்டர்?
இதையடுத்து வீடு திரும்பிய ரிஷப் பண்ட் கடந்த சில மாதங்களாக பெங்களுரூவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், ஆசிய கோப்பை 2023 மற்றும் உலகக் கோப்பை 2023 நடக்க உள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில், தனது உடல்தகுதியை நிரூபிக்கும் வகையில், பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
IND vs PAK Match: ஸ்டார் ஹோட்டல்களில் 2 இரவுக்கு ரூ.3,50,000 வாடகையா?
இதற்கு முன்னதாக கடந்த சின தினங்களுக்கு முன்பு கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் 50 ஓவர்கள் கொண்ட பயிற்சியை மேற்கொண்டனர். இதனை ரிஷப் பண்ட் வேடிக்கை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், ரிஷப் பண்ட் நேற்று தனது பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Asia Cup 2023: இந்தியா – பாகிஸ்தான் போட்டி ஆசிய கோப்பைக்கான புரோமோ வீடியோ வெளியீடு!