Asianet News TamilAsianet News Tamil

BAN vs IND: ஒருநாள் அணியிலிருந்து ரிஷப் பண்ட் நீக்கம்.. பிசிசிஐ அதிரடி

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலிருந்து ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 

rishabh pant released from india odi squad in bangladesh
Author
First Published Dec 4, 2022, 4:02 PM IST

இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இன்று முதல் ஒருநாள் போட்டி நடந்துவருகிறது.

நியூசிலாந்து தொடரில் ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய மூவரும் வங்கதேச தொடரில் ஆடுகின்றனர். ரிஷப் பண்ட் இந்திய அணியில் ஆட கிடைக்கும் வாய்ப்புகளில் மோசமாக பேட்டிங் ஆடி வாய்ப்புகளை வீணடிக்கிறார் என்ற விமர்சனங்கள் வலுத்தன. ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை ஆட வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுவருகிறது. ஆனால் வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இல்லை.

AUS vs WI: முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி.! 1-0 என தொடரில் முன்னிலை

இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் ஆடவில்லை. கேஎல் ராகுலே விக்கெட் கீப்பிங் செய்தார். முதல் ஒருநாள் போட்டி நடந்துவருவதற்கு இடையே, ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியிலிருந்து விடுவித்தது பிசிசிஐ.

மருத்துவக்குழுவுடன் ஆலோசித்து ரிஷப் பண்ட் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இணைவார் என்று பிசிசிஐ அறிவித்தது.

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்..? மைக் ஹசி கருத்து

இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று ஜடேஜா, ஷமி ஆகிய வீரர்கள் காயத்தால் விலகினர். அவர்களுக்கு மாற்று வீரர்களாக ஷபாஸ் அகமது மற்றும் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், ரிஷப் பண்ட்டும் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு மாற்று வீரர் என்று யாரும் அறிவிக்கப்படவில்லை.
 

Follow Us:
Download App:
  • android
  • ios