Asianet News TamilAsianet News Tamil

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்..? மைக் ஹசி கருத்து

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று அந்த அணியில் நீண்டகாலம் ஆடி அந்த அணி செட்டப்பை நன்கு அறிந்தவரான மைக் ஹசி கருத்து கூறியுள்ளார்.
 

mike hussey picks ruturaj gaikwad as next captain of csk after ms dhoni
Author
First Published Dec 3, 2022, 8:40 PM IST

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமான முடிந்துள்ளன. இந்த 15 சீசனில் 4 முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது சிஎஸ்கே. சிஎஸ்கே அணி ஒரு சீசனை தவிர, மற்ற ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றது.

ஐபிஎல்லில் ஃபைனல் வரை செல்வதையும், கோப்பையை வெல்வதையும் ஒரு வழக்கமாகவே வைத்துள்ள அணி சிஎஸ்கே. அந்தளவிற்கு அந்த அணி ஆதிக்கம் செலுத்த முக்கிய காரணம் கேப்டன் தோனி தான். எனவே சிஎஸ்கே அணி தொடர்ந்து இதேமாதிரி ஜொலிக்க வேண்டுமானால் அதற்கு சிறப்பான கேப்டன் அவசியம்.

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரலைனா போய்ட்டு போகுது.. அதுக்கு என்ன பண்றது? ஆசிய கோப்பை குறித்து ரமீஸ் ராஜா தடாலடி

எனவே தோனிக்கு அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி வலுத்துவருகிறது. தான் இருக்கும்போதே அடுத்த கேப்டனை உருவாக்கி கொடுத்துவிட வேண்டும் என நினைத்த தோனி, கடந்த சீசனில் ஜடேஜாவை கேப்டனாக்கினார். ஆனால் ஜடேஜா கேப்டன்சியில் ஜொலிக்கவில்லை. அவரது கேப்டன்சியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை தழுவியது. மேலும் ஜடேஜா ஒரு கேப்டனாக சுதந்திரமாக செயல்பட முடியாத சூழலும் இருந்தது. தோனியின் தலையீடுகள் அதிகம் இருந்தன. பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த சீசனின் பாதியில் கேப்டன்சியிலிருந்து விலகினார் ஜடேஜா. 

அதன்பின்னர் சிஎஸ்கே அணியுடனான மோதல் போக்கையும் மீறி, ஜடேஜா சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார். ஆனால் அடுத்த கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட இனிமேல் வாய்ப்பில்லை. இதற்கிடையே, அடுத்த சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சனை விடுவித்துள்ளது.

தோனியை போன்ற மிகவும் கூலான, நிதானமான, தெளிவான கேப்டனான கேன் வில்லியம்சன், சிஎஸ்கே அணியில் தோனிக்கு அடுத்த சரியான கேப்டன்சி ஆப்சனாக இருப்பார். எனவே அவரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே முயற்சிக்கலாம்.

ஆனால் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன்சி குறித்த திட்டம் என்னவென்பது தெரியவில்லை. இந்நிலையில், அதுகுறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசி கருத்து கூறியுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் மகாராஷ்டிரா அணிக்காகா அபாரமாக ஆடி இரட்டை சதம் உட்பட சதங்களாக விளாசி தள்ளி அசத்திய ருதுராஜ் கெய்க்வாட்டை நியமிக்கலாம் என்று மைக் ஹசி கூறியுள்ளார்.

BAN vs IND: காயத்தால் விலகிய ஷமி.. முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

இதுகுறித்து பேசிய மைக் ஹசி, சிஎஸ்கே அணியின் திட்டம் என்னவென்று தெரியவில்லை. ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமிக்கலாம். அவர் தோனியை போலவே மிகவும் நிதானமானவர். தோனி அழுத்தமான சூழல்களை நிதானமாக கையாளக்கூடியவர். ஆட்டத்தின் போக்கை நன்கு கணிக்கக்கூடியவர். தலைமைத்துவ பண்புகள் நிறைந்தவர். தோனியை போலவே ருதுராஜ் இருக்கிறார். எனவே அவரையே அடுத்த கேப்டனாக நியமிக்கலாம் என்று மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios