BAN vs IND: காயத்தால் விலகிய ஷமி.. முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்
வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெறாத கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் இந்த சுற்றுப்பயணத்தில் ஆடுகின்றனர்.
இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. ராகுல் திரிபாதி, ரஜத் பட்டிதார் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே.
BAN vs IND: ரிஷப் பண்ட்டுக்கு இதுவே கடைசி சான்ஸ்..! சொதப்பினால் இந்திய அணியில் இடம் காலி
3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை தாக்காவில் நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ரோஹித் சர்மாவுடன் ஷிகர் தவான் தொடக்க வீரராக இறங்குவார். 3ம் வரிசையில் விராட் கோலி, 4ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இறங்குவார்கள். 5ம் வரிசையில் ராகுலும் அதன்பின்னர் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் ஆடுவார்கள். ஸ்பின்னர்களாக ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷபாஸ் அகமது ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக தீபக் சாஹர், முகமது சிராஜ், உம்ரான் மாலிக் ஆகிய மூவரும் ஆடுவார்கள்.
இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முகமது ஷமி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதால் அவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே அவர் கண்டிப்பாக ஆடுவார்.
உத்தேச இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், ஷபாஸ் அகமது, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.