வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாகும் ஐபிஎல் ஸ்டார் ரிங்கு சிங்?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் ரிங்கு சிங் இடம் பெற்று விளையாட இருப்பதாக கூறப்படுகிறது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 2ஆவது முறையாக தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.
புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்த கோவை; கடைசி இடத்தில் பா11சி திருச்சி!
வரும் ஜூலை 12 ஆம் தேதி தொடங்கும் இந்த டூர் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முடிகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் போட்டியில் புஜாரா மற்றும் ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், நவ்தீப் சைனி, ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
சொந்த மண்ணில் விக்கெட் எடுத்த நடராஜன்; முதல் முறையாக நேரில் பார்த்து ரசித்த நட்டு ஃபேமிலி!
உமேஷ் யாதவ் காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகள் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 474 ரன்கள் குவித்தார். அதுமட்டுமின்றி ஸ்டிரைக் ரேட்டும் 59.25 வைத்திருந்தார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் மட்டும் 5 சிக்ஸர்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதன் காரணமாக ரிங்கு சிங் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. மாறாக, ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார்.
இதில், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, முகேஷ் குமார், முகமது சிராஜ் மற்றும் ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் டி20 தொடரில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Candy Crush விளையாடிய தோனிக்கு தட்டு நிறைய சாக்லேட் கொடுத்த பணிப்பெண்: வைரலாகும் வீடியோ!