விமானத்தில் வைத்து கேண்டி க்ரஷ் (Candy Crush) விளையாடிய தோனியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியவர் மகேந்திர சிங் தோனி. விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் நிலைநிறுத்திக் கொண்ட தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4876 ரன்களும், 350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10,773 ரன்களும், 98 டி20 போட்டிகளில் விளையாடி 1617 ரன்களும் எடுத்துள்ளார்.
அதிரடி காட்டிய சாய் கிஷோர்: ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 201 ரன்கள் குவிப்பு!
இந்திய அணிக்கு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு முழுக்க முழுக்க ஐபிஎல் தொடர்களில் கவனம் செலுத்தினார்.
ஆட்டம் கண்டுப்போன திண்டுக்கல் டிராகன்ஸ்: லைகா கோவை கிங்ஸ் நம்பர் 1 பிளேஸ்!
எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியனானது. நடந்து முடிந்த 16ஆவது ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியனானது. இதையடுத்து, தோனி தனது முழங்கால் காயத்திற்கு அறுவை செய்து கொண்டு, ராஞ்சியில் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
ஐபிஎல் பிளேயருன்னா சும்மாவா: தாறுமாறாக ஆடிய சாய் சுதர்சன்; லைகா கோவை கிங்ஸ் 206 ரன்கள் குவிப்பு!
இந்த நிலையில், தோனி விமானத்தில் செல்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் டேப்லெட்டில் கேண்டி க்ரஷ் கேம் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், பணிப்பெண் ஒருவர் தட்டு நிறைய சாக்லேட்ஸ் மற்றும் பிஸ்கட் எடுத்துக் கொண்டு வந்து தோனியிடம் கொடுக்கிறார். அதனை பெற்றுக் கொண்டு அதிலிருந்து ஒரு சாக்லேட் மட்டும் தோனி எடுத்துக் கொண்டு, தட்டை பணிப்பெண்ணிடம் கொடுக்கிறார். இந்த வீடியோ தான் கேண்டி க்ரஷ் Candy Crush என்று டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
1983ல் உலகக் கோப்பை சாம்பியன்: 40ஆவது ஆண்டு வெற்றியை கொண்டாடும் முன்னாள் வீரர்கள்!
