முதல் முறையாக கடந்த 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை வென்று இன்றுடன் 40 ஆண்டுகள் ஆன நிலையில் முன்னாள் வீரர்கள் ஒன்று சேர்ந்து தங்களது வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

கடந்த 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்திலும், வேல்ஸ் நாட்டிலும் நடந்தது. இதில், 8 அணிகள் இடம் பெற்று மொத்தம் 27 போட்டிகள் நடந்தது. கடைசியாக இறுதிப் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. இந்திய அணியில் சுனில் கவாஸ்கர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், மொஹிந்தர் அமர்நாத், யஷ்பால் சர்மா, சந்தீப் பாட்டீல், கபில் தேவ் (கேப்டன்), கிர்த்தி ஆசாத், ரோஜர் பின்னி, மதன் லால், சையத் கிர்மானி (விக்கெட் கீப்பர்), பல்விந்தர் சந்து ஆகியோர் இடம் பெற்று விளையாடினர்.

Scroll to load tweet…

Scroll to load tweet…

கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 54.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 38 ரன்கள் எடுத்தார். மொஹிந்தர் அமர்நாத் 26 ரன்களும், சந்தீப் பாட்டீல் 27 ரன்களும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து 184 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடியது. இதில், சர் விவ் ரிச்சர்ட்ஸ் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 52 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்து வீச்சு தரப்பில் மதன் லால் மற்றும் மொஹிந்தர் அமர்நாத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், பல்விந்தர் சந்து 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

ஐபிஎல் விளையாடினால் போதுமா? தேர்வுக் குழுவை விமர்சனம் செய்த வாசீம் ஜாஃபர்!

இதன் மூலமாக இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் சாம்பியனானது. இதைத் தொடர்ந்து இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றி இன்றுடன் 40 ஆண்டுகள் ஆன நிலையில், உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் வீரர்கள் ஒன்றாக குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இவ்வளவு ஏன், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்ற கீர்த்தி ஆசாத் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபடி உலகக் கோப்பை வென்று 40 ஆண்டுகள் ஆன தங்களது வெற்றியை கொண்டாடி மகிழந்துள்ளனர்.

உலகக் கோப்பை தான் ரோகித் சர்மாவுக்கு கடைசி வாய்ப்பு – ரவி சாஸ்திரி!

Scroll to load tweet…

சீகம் மதுரை பாந்தர்ஸ் ஃபர்ஸ்ட் வெற்றி: புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!