ஐபிஎல் விளையாடினால் போதுமா? தேர்வுக் குழுவை விமர்சனம் செய்த வாசீம் ஜாஃபர்!
வெஸ்ட் இண்டீஸில் 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது தொடர்பாக இந்திய தேர்வுக் குழுவை முன்னாள் இந்திய அணி வீரர் வாசீம் ஜாஃபர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி 2ஆவது முறையாக தோல்வி அடைந்தது. இந்த தொடரைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
உலகக் கோப்பை தான் ரோகித் சர்மாவுக்கு கடைசி வாய்ப்பு – ரவி சாஸ்திரி!
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில், சட்டேஷ்வர் புஜாரா, முகமது ஷமி ஆகியோர் இடம் பெறவில்லை. மாறாக, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும், நவ்தீப் சைனி மற்றும் முகேஷ் குமாரும் ஆகியோரும் இடம் பெற்றனர்.
சீகம் மதுரை பாந்தர்ஸ் ஃபர்ஸ்ட் வெற்றி: புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!
ஆனால், ரஞ்சி டிராபி போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சர்பராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன், பிரியங்க் பஞ்சால் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கவில்லை. இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக தேர்வுக் குழுவை சில கேள்விகள் மூலமாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
முதல் கோல் அடித்த மகேஷ் நௌரேம் சிங்: நேபாளை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!
இது குறித்து அவர் எழுப்பிய கேள்விகள்:
கேள்வி 1:
4 தொடக்க வீரர்களின் தேவை என்ன? மாறாக, உள்ளூர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கானை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தேர்வு செய்திருக்கலாம்.
கேள்வி 2:
அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் பிரியங்க் பஞ்சால் ஆகியோர் ரஞ்சி மற்றும் இந்தியா ஏ போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதன் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்திய அணியில் இடம் பெற்று விளையாடுவதற்கு நீண்ட காலமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ளார்.
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அட்டவணை ரெடி; ஜூன் 27ல் வெளியீடு!
கேள்வி 3:
ஆச்சரியமான ஒன்று உண்டு என்றால், அது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது தான். அவர் எவ்வளவுக்கு எவ்வளவு பந்து வீசுகிறாரோ, அந்தளவிற்கு ஃபிட்டாகவும் இருக்கிறார். அப்படியிருக்கும் போது அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது தான் ஆச்சரியமான ஒன்றாக கருதப்படுகிறது.