ஆட்டம் கண்டுப்போன திண்டுக்கல் டிராகன்ஸ்: லைகா கோவை கிங்ஸ் நம்பர் 1 பிளேஸ்!

லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

Lyca Kovai Kings Beat Dindigul Dragons by 59 Runs in 16th Match in TNPL 2023

தமிழ்நாடு பிரீமியர் லீக் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இடம் பெற்றுள்ள ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக போராடி வருகின்றன. ஏற்கனவே 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன் இடத்திலும், லைகா கோவை கிங்ஸ் 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 3ஆவது இடத்திலும் இருந்தது.

ஐபிஎல் பிளேயருன்னா சும்மாவா: தாறுமாறாக ஆடிய சாய் சுதர்சன்; லைகா கோவை கிங்ஸ் 206 ரன்கள் குவிப்பு!

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 16ஆவது போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் ஆடி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இதில், சாய் சுதர்சன் அதிரடியாக ஆடி 41 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். கடைசியாக வந்த முகிலேஷ் 34 ரன்கள் சேர்த்தார். இறுதியாக லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்தது.

பந்து வீச்சு தரப்பில் சரவணக் குமார் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரவிச்சந்திரன் அஸ்வின், மதிவாணன் மற்றும் சுபோத் பதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் கடின இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் தொடக்க வீரர் ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மற்றொரு தொடக்க வீரர் சிவம் சிங் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 42 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

1983ல் உலகக் கோப்பை சாம்பியன்: 40ஆவது ஆண்டு வெற்றியை கொண்டாடும் முன்னாள் வீரர்கள்!

கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். சரத்குமார் 36 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியின் மூலமாக 4 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. லைகா கோவை கிங்ஸ் அணி 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் விளையாடினால் போதுமா? தேர்வுக் குழுவை விமர்சனம் செய்த வாசீம் ஜாஃபர்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios