அதிரடி காட்டிய சாய் கிஷோர்: ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 201 ரன்கள் குவிப்பு!
பா11சி திருச்சி அணிக்கு எதிரான 17ஆவது போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் 16 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. லைகா கோவை கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது. இதே போன்று, பா11சி திருச்சி அணி விளையாடிய 3 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஆட்டம் கண்டுப்போன திண்டுக்கல் டிராகன்ஸ்: லைகா கோவை கிங்ஸ் நம்பர் 1 பிளேஸ்!
தற்போது பா11சி திருச்சி மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான 17ஆவது போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற பா11சி திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியில் தொடக்க வீரர் ராதாகிருஷ்ணன் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் துஷார் ரஹேஜா 8 ரன்களில் வெளியேறினார்.
ஐபிஎல் பிளேயருன்னா சும்மாவா: தாறுமாறாக ஆடிய சாய் சுதர்சன்; லைகா கோவை கிங்ஸ் 206 ரன்கள் குவிப்பு!
இவரைத் தொடர்ந்து வந்த ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷோர் அதிரடியாக ஆடினார். அவர் 24 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதே போன்று பாலசந்தர் அனிருத் 25 பந்துகள் விளையாடி 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியாக ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்துள்ளது.
1983ல் உலகக் கோப்பை சாம்பியன்: 40ஆவது ஆண்டு வெற்றியை கொண்டாடும் முன்னாள் வீரர்கள்!