சொந்த மண்ணில் விக்கெட் எடுத்த நடராஜன்; முதல் முறையாக நேரில் பார்த்து ரசித்த நட்டு ஃபேமிலி!

சேலத்தில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பா11சி திருச்சி அணி வீரர் நடராஜன் விக்கெட் கைப்பற்றியதை அவரது குடும்பத்தினர் நேரில் பார்த்து ரசித்துள்ளனர்.

Natarajan took wicket against IDream Tiruppur Tamizhans in TNPL and his family watching him play for the first time

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் 16 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில், லைகா கோவை கிங்ஸ் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலும், பா11சி திருச்சி கடைசி இடத்திலும் உள்ளன. நேற்று நடந்த 17ஆவது டிஎன்பிஎல் லீக் போட்டியில் பா11சி திருச்சி அணியும், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின.

புவனேஷ்வரன் வேகத்தில் போட்டி போட்டுக் கொண்ட அவுட்டான திருச்சி வீரர்கள்; ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி!

இதில், டாஸ் வென்ற பா11சி திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியில் தொடக்க வீரர் ராதாகிருஷ்ணன் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் துஷார் ரஹேஜா 8 ரன்களில் வெளியேறினார்.

 

 

இவரைத் தொடர்ந்து வந்த ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷோர் அதிரடியாக ஆடினார். அவர் 24 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதே போன்று பாலசந்தர் அனிருத் 25 பந்துகள் விளையாடி 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியாக ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.

5 போட்டிகளில் 330 ரன்கள்: நம்பர் ஒன் இடத்தில் சாய் சுதர்சன்!

நடராஜன் TNPL இல் இந்தியாவின் 300 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் வீரராக சொந்த மண்ணில் தனது முதல் போட்டியை விளையாடினார். இது அவரது வாழ்க்கையின் அதிர்ஷ்டத்தை மாற்றியது. சேலத்தில், தனது சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டியில் பா11சி திருச்சி அணி வீரர் நடராஜன் விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார். முதல் முறையாக அவரது குடும்ப உறுப்பினர் நேரில் வந்து பார்த்து ரசித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Candy Crush விளையாடிய தோனிக்கு தட்டு நிறைய சாக்லேட் கொடுத்த பணிப்பெண்: வைரலாகும் வீடியோ!

பின்னர் கடின இலக்கை துரத்திய பா11சி திருச்சி அணிக்கு தொடக்க வீரர்களான கங்கா ஸ்ரீதர் ராஜூ மற்றும் ராஜ்குமார் இருவரும் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆட முயற்சித்த கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ராஜ்குமார் 22 ரன்களில் வெளியேறினார். டேரில் ஃபெராரியோ 42 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ஆண்டனி தாஸ் 25 ரன்கள் எடுத்துக் கொடுக்க, ஜாஃபர் ஜமால் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பா11சி திருச்சி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்து 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அதிரடி காட்டிய சாய் கிஷோர்: ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 201 ரன்கள் குவிப்பு!

இதன் மூலமாக விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது. பந்து வீச்சைப் பொறுத்தவரையில் பி புவனேஷ்வரன் 4 ஓவர்கள் வீசி 4 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios