5 போட்டிகளில் 330 ரன்கள்: நம்பர் ஒன் இடத்தில் சாய் சுதர்சன்!
டிஎன்பிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 4 அரைசதம் உள்பட லைகா கோவை கிங்ஸ் அணி வீரர் சாய் சுதர்சன் 330 ரன்கள் எடுத்துள்ளார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 8 அணிகள் இடம் பெற்று, 32 போட்டிகள் நடத்தப்படுகிறது. கடந்த 12ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் ஜூலை 12 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், லைகா கோவை கிங்ஸ் அணியில் சாய் சுதர்சன் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
Candy Crush விளையாடிய தோனிக்கு தட்டு நிறைய சாக்லேட் கொடுத்த பணிப்பெண்: வைரலாகும் வீடியோ!
இந்த சீசனுக்காக சாய் சுதர்சன் ரூ.21.6 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். டிஎன்பிஎல் தொடரில் இதுவரையில் 16 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில், லைகா கோவை கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. இதுவரையில் நடந்த 5 போட்டிகளில் சாய் சுதர்சன் 4 போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளார். ஒரு போட்டியில் மட்டுமே அவர் 7 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். ஒரு போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பையும் கோட்டைவிட்டுள்ளார்.
அதிரடி காட்டிய சாய் கிஷோர்: ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 201 ரன்கள் குவிப்பு!
ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சாய் சுதர்சன் 45 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 86 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் கடைசியாக அவர் ரன் அவுட் செய்யப்பட்டார். இந்தப் போட்டியைத் தொடர்ந்து நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த 6ஆவது போட்டியில் 52 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 90 ரன்கள் சேர்த்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக நடந்த 9 ஆவது போட்டியில் 43 பந்துகளில் ஒரு சிக்சர், 9 பவுண்டரி உள்பட 64 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
ஐபிஎல் பிளேயருன்னா சும்மாவா: தாறுமாறாக ஆடிய சாய் சுதர்சன்; லைகா கோவை கிங்ஸ் 206 ரன்கள் குவிப்பு!
அடுத்து பா11சி திருச்சி அணிக்கு எதிராக நடந்த 12ஆவது போட்டியில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இன்று நடந்த 16ஆவது டிஎன்பிஎல் போட்டியில் 41 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் உள்பட 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால், இதுவரையில் நடந்த போட்டியில் இன்னும் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1983ல் உலகக் கோப்பை சாம்பியன்: 40ஆவது ஆண்டு வெற்றியை கொண்டாடும் முன்னாள் வீரர்கள்!