புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்த கோவை; கடைசி இடத்தில் பா11சி திருச்சி!
டிஎன்பிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய லைகா கோவை கிங்ஸ் 4ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் இடம் பெற்று விளையாடிய வருகின்றன. இதுவரையில் 17 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில், லைகா கோவை கிங்ஸ் முதலிடத்திலும், பா11சி திருச்சி அணி கடைசி இடத்திலும் இடம் பெற்றுள்ளன.
சொந்த மண்ணில் விக்கெட் எடுத்த நடராஜன்; முதல் முறையாக நேரில் பார்த்து ரசித்த நட்டு ஃபேமிலி!
நேற்று 2 போட்டிகள் நடந்தது. இதில் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி 206 ரன்கள் குவித்தது. பின்னர், கடின இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது.
இதே போன்று, இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற லைகா கோவை கிங்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து நடந்த 2ஆவது போட்டியில் பா11சி திருச்சி அணியும், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின. இதில், முதலில் ஆடிய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 201 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை துரத்திய பா11சி திருச்சி அணியில் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடைசியாக திருச்சி அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்து 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்து 4 போட்டியிலும் தோற்று 0 புள்ளிகளுடன் திருச்சி அணி கடைசி இடம் பிடித்துள்ளது.
Candy Crush விளையாடிய தோனிக்கு தட்டு நிறைய சாக்லேட் கொடுத்த பணிப்பெண்: வைரலாகும் வீடியோ!
ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்து 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளது. நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 4 புள்ளிகள் பெற்று 4ஆவது இடத்திலும் உள்ளது.
அதிரடி காட்டிய சாய் கிஷோர்: ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 201 ரன்கள் குவிப்பு!
சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 2 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் 7ஆவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் 18ஆவது போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும், சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன.
- Ba11sy Trichy
- Balchander Anirudh
- Daryl Ferrario
- Dindigul Dragons
- Ganga Sridhar Raju
- IDream Tiruppur Tamizhans
- IDream Tiruppur Tamizhans vs Ba11sy Trichy
- ITT vs TRICHY
- Lyca Kovai Kings
- P Bhuvaneswaran
- Points Table
- Ravisrinivasan Sai Kishore
- S Radhakrishnan
- Sai Kishore
- Salem Spartans
- TNPL 2023
- TNPL Points Table
- Tamilnadu Premier League
- Vijay Shankar