சூர்யகுமார் யாதவால் என்ன செய்ய முடியும்னு உலகத்துக்கே தெரியும்! ODI WC அணியில் கண்டிப்பா எடுக்கணும் - பாண்டிங்

சூர்யகுமார் யாதவ் ஃபார்மில் இல்லை என்று விமர்சிக்கப்படும் நிலையில், அவரை கண்டிப்பாக ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
 

ricky ponting opines suryakumar yadav should play in odi world cup 2023 for team india

இந்தியாவின் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் அபாயகரமான பேட்ஸ்மேன். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடியவர். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக, இந்திய அணியிலும் இடம்பிடித்து கடந்த 2 ஆண்டுகளாக அபாரமாக ஆடிவருகிறார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 48 போட்டிகளில் ஆடி 3 சதங்களை விளாசி அசத்தியுள்ளார். ஆனால் அண்மைக்காலமாக பேட்டிங்கில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவருகிறார். ஆஸி.,க்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஆடாததால் அவருக்கு பதிலாக ஆடிய சூர்யகுமார் யாதவ், 3 ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி மோசமான சாதனையை படைத்தார். அது அவருக்கு தன்னம்பிக்கை குறைவை ஏற்படுத்தியது.

IPL 2023: ரஜத் பட்டிதார், ரீஸ் டாப்ளிக்கு மாற்று வீரர்களை அறிவித்தது ஆர்சிபி

அதைத்தொடர்ந்து ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிவரும் சூர்யகுமார் யாதவ், ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் சரியாக 16 பந்தில் 15 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். 

இந்நிலையில், அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், அனைவரது கெரியரிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஒரே தொடரில் ஒரு வீரர் 3 கோல்டன் டக் அவுட்டானதை நான் பார்த்ததில்லை. சர்வதேச வீரர்களின் கெரியரில் இது நடக்கும். கடந்த ஒன்றரை ஆண்டாக அபாரமாக ஆடினார் சூர்யகுமார் யாதவ்.

IPL 2023: அந்த ஒரு பந்தை வீச தெரியலைனா பவுலர்ஸ் வேஸ்ட்..! சிஎஸ்கே பவுலர்களுக்கு லெஜண்ட் பிராவோவின் அறிவுரை

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவால் என்ன செய்யமுடியும் என்று உலகத்துக்கே தெரியும். உலக கோப்பையை ஜெயித்து கொடுக்கக்கூடிய வீரர் சூர்யகுமார் யாதவ். எனவே அவரை ஒருநாள் உலக கோப்பைக்கான அணியில் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios