MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2023: ரஜத் பட்டிதார், ரீஸ் டாப்ளிக்கு மாற்று வீரர்களை அறிவித்தது ஆர்சிபி

IPL 2023: ரஜத் பட்டிதார், ரீஸ் டாப்ளிக்கு மாற்று வீரர்களை அறிவித்தது ஆர்சிபி

ஐபிஎல் 16வது சீசனிலிருந்து காயத்தால் விலகிய ரஜத் பட்டிதார் மற்றும் ரீஸ் டாப்ளி ஆகிய இருவருக்கும் மாற்று வீரர்களை அறிவித்துள்ளது ஆர்சிபி அணி. 

1 Min read
Author : karthikeyan V
Published : Apr 07 2023, 06:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ள ஆர்சிபி அணி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. 
 

25

ஆனால் 2வது போட்டியில் கேகேஆரிடம் படுதோல்வி அடைந்தது. விராட் கோலி மற்றும் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஆகிய இருவரையும் பேட்டிங்கில் அதிகமாக சார்ந்திருப்பதே இந்த தோல்விக்கு காரணம். அவர்கள் இருவரும் நன்றாக ஆடியதால் மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய ஆர்சிபி அணி, அவர்கள் இருவரும் பவர்ப்ளேயில் ஆட்டமிழந்ததால், அடுத்த 80 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து கேகேஆரிடம் படுதோல்வி அடைந்தது. 

IPL 2023:தென்னாப்பிரிக்க வீரர்கள் வருகையால் LSG-SRH அணிகளில் அதிரடி மாற்றங்கள்! இருஅணிகளின் உத்தேச ஆடும் லெவன்

35

அதற்கு காரணம் ரஜத் பட்டிதார் காயத்தால் இந்த சீசனிலிருந்து விலகியதால் மிடில் ஆர்டர் பலவீனமடைந்ததுதான். ரஜத் பட்டிதார் காயத்தால் இந்த சீசனிலிருந்து விலகினார். ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக முதல் பாதி சீசனிலிருந்து விலகினார். 
 

45

அவரது இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ரீஸ் டாப்ளியும் முதல் போட்டியிலேயே காயமடைந்து இந்த தொடரைவிட்டு விலகினார். 

IPL 2023: ஃபார்மில் இல்லாத சூர்யகுமார் யாதவுக்கு டிவில்லியர்ஸ் உருப்படியான அட்வைஸ்..!

55

இதையடுத்து இவர்கள் இருவருக்கும் மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ரீஸ் டாப்ளிக்கு மாற்றாக தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் வைன் பார்னெல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வைன் பார்னெல் சர்வதேச கிரிக்கெட்டில் 6 டெஸ்ட், 73 ஒருநாள் மற்றும் 56 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். ஐபிஎல்லில் 26 போட்டிகளில் ஆடி 26 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல்லில் நல்ல அனுபவம் கொண்ட பார்னெலை ரூ.75 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது ஆர்சிபி அணி.. பேட்ஸ்மேனான ரஜத் பட்டிதாருக்கு மாற்றாக  ஃபாஸ்ட் பவுலரான வைஷாக் விஜய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
 

About the Author

KV
karthikeyan V
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரிங்கு சிங் இருந்தும் சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு? பிசிசிஐ-யின் ரகசிய பிளான் அம்பலம்!
Recommended image2
இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானிலும் சஞ்சு சாம்சன் மேனியா! எல்லை தாண்டி ஒலிக்கும் 'சஞ்சு' நாமம்!
Recommended image3
இந்தியா vs இங்கிலாந்து.. டி20 உலகக்கோப்பையில் கெத்து காட்டியது யார்? முழு ரிப்போர்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved