IPL 2023:தென்னாப்பிரிக்க வீரர்கள் வருகையால் LSG-SRH அணிகளில் அதிரடி மாற்றங்கள்! இருஅணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் மோதும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஆடுகின்றன. முதலிரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியடைந்த நிலையில், மீண்டும் வெற்றியை பெறும் முனைப்பில் லக்னோ அணி களமிறங்குகிறது.
முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.
IPL 2023: ஃபார்மில் இல்லாத சூர்யகுமார் யாதவுக்கு டிவில்லியர்ஸ் உருப்படியான அட்வைஸ்..!
லக்னோவில் நடக்கும் இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். தென்னாப்பிரிக்க வீரர்கள் சர்வதேச கடமையை ஆற்றிவிட்டு ஐபிஎல்லுக்கு திரும்பியுள்ளனர். அதனால் இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படுகிறது.
Image Credit: PTI
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் குயிண்டன் டி காக் ஆடுவதால் மார்கஸ் ஸ்டோய்னிஸ் நீக்கப்படலாம். சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் அணியில் இணைவதால் ஃபஸல்ஹக் ஃபரூக்கி நீக்கப்படலாம்.
உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, ரவி பிஷ்னோய், மார்க் உட், யஷ் தாகூர், ஆவேஷ் கான்.
உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
அபிஷேக் ஷர்மா, மயன்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹாரி ப்ரூக், க்ளென் ஃபிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், அடில் ரஷீத், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.