IPL 2023: ஃபார்மில் இல்லாத சூர்யகுமார் யாதவுக்கு டிவில்லியர்ஸ் உருப்படியான அட்வைஸ்..!
சூர்யகுமார் யாதவ் ஃபார்மில் இல்லாமல் திணறிவரும் நிலையில், அவரது இழந்த ஃபார்மை மீட்டு மீண்டும் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்த, ஏபி டிவில்லியர்ஸ் அறிவுரை கூறியுள்ளார்.
இந்தியாவின் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் அபாயகரமான பேட்ஸ்மேன். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடியவர். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக, இந்திய அணியிலும் இடம்பிடித்து கடந்த 2 ஆண்டுகளாக அபாரமாக ஆடிவருகிறார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 48 போட்டிகளில் ஆடி 3 சதங்களை விளாசி அசத்தியுள்ளார். ஆனால் அண்மைக்காலமாக பேட்டிங்கில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவருகிறார். ஆஸி.,க்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஆடாததால் அவருக்கு பதிலாக ஆடிய சூர்யகுமார் யாதவ், 3 ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி மோசமான சாதனையை படைத்தார். அது அவருக்கு தன்னம்பிக்கை குறைவை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிவரும் சூர்யகுமார் யாதவ், ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் சரியாக 16 பந்தில் 15 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். இந்நிலையில், சூர்யகுமார் யாதவுக்கு டிவில்லியர்ஸ் அறிவுரை கூறியுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் குறித்து பேசிய டிவில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ் இப்போதிருக்கும் சூழலில் ஏதாவது செய்தாக வேண்டும். இந்த மாதிரியான காலக்கட்டத்தில் செயல்பட வேண்டிய ரகசியம் என்னவென்றால், பயப்படாமல் அவரது கேம் பிளானை மாற்றாமல் ஆடவேண்டும். கடந்த சில ஆண்டுகளாக எப்படி ஆடி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாரோ அதையே தான் செய்ய வேண்டும்.