ICC WTC ஃபைனல்: பெஸ்ட் ஃபார்முக்கு வந்த விராட் கோலி.. ஆஸ்திரேலியாவை எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங்

ஐபிஎல்லில் சதமடித்து தனது சிறப்பான ஃபார்மிற்கு விராட் கோலி திரும்பியுள்ள நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய அணியை எச்சரித்துள்ளார் ரிக்கி பாண்டிங்.
 

ricky ponting issues warning to australia team after virat kohli to gets his best form in ipl 2023 ahead of icc wtc final

ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டும் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது. லீக் சுற்றில் இன்னும் ஒருசில போட்டிகளே மீதமிருக்கும் நிலையில், எஞ்சிய3 இடங்களுக்கு லக்னோ, சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி ஆகிய 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் அணியும் இந்த ரேஸில் உள்ளது. பஞ்சாப், கேகேஆர் அணிகளுக்கும் பின்புற வாய்ப்புள்ளது.

இந்த சீசன் மிக விறுவிறுப்பானதாக அமைந்துள்ள நிலையில், இந்த சீசன் தொடக்கத்திலிருந்தே கோலி நன்றாக ஆடிவந்தாலும், சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் தான் சதத்தை விளாசி மீண்டும் தனது பெஸ்ட் ஃபார்மிற்கு திரும்பியுள்ளார். விராட் கோலி சதத்தை அவரது பென்ச் மார்க்காக செட்  செய்திருப்பதால் அதற்கு குறைவாக ஸ்கோர் செய்வது அவரது சிறந்த ஃபார்ம் கிடையாது. அந்தவகையில், சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் ஐபிஎல்லில் மீண்டும் சதமடித்து ஃபார்முக்கு வந்துள்ளார்.

IPL 2023: சீசனின் பாதியில் ஓடிய ஆர்ச்சருக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் கொடுக்கக்கூடாது..! கவாஸ்கர் கடும் விளாசல்

ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி ஜெயிப்பதற்கு மட்டும் அவரது ஃபார்ம் முக்கியமல்ல; அதைத்தொடர்ந்து நடக்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வெல்லவும் அவரது ஃபார்ம் மிக அவசியமானது.

வரும் ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவலில் தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்  ஃபைனலில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதவுள்ள நிலையில், விராட் கோலி அவரது சிறந்த ஃபார்மிற்கு திரும்பியிருப்பதால், ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ளார் ரிக்கி பாண்டிங்.

இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், ஐபிஎல்லில் ஆர்சிபிக்கு எதிராக டெல்லி கேபிடள்ஸ் பெங்களூருவில் ஆடிய போட்டியின்போது விராட் கோலியை சந்தித்து பேசினேன். அப்போதே அவர், அவரது பெஸ்ட் ஃபார்மிற்கு விரைவில் வரப்போவதாக கூறியிருந்தார். அதேபோலவே அபார சதமடித்து ஃபார்முக்கு வந்துவிட்டார். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விராட் கோலியின் விக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு மிகப்பெரிய பரிசாக இருக்கும். 

IPL 2023: ஐபிஎல்லில் அசத்திய இந்த 3 வீரர்களையும் ODI உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்கணும் - ரவி சாஸ்திரி

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கிற்கும், ஆஸ்திரேலியாவின் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கும் இடையேயான போட்டியாகத்தான் இருக்கும். பொதுவாக இந்திய ஸ்பின்னர்களுக்கும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கும் இடையேயான போட்டியாகத்தான் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் இருக்கும். ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக இருக்கும் என்று பாண்டிங் கூறியிருக்கிறார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios