இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 260 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் இந்திய அணியின் டாப் 3 வீரர்களும் ரீஸ் டாப்ளியின் பவுலிங்கில் ஆட்டமிழந்துவிட்டனர். 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் 1-1 என சமனடைந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மான்செஸ்டரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 45.5 ஓவரில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ மற்றும் நட்சத்திர வீரர் ஜோ ரூட் ஆகிய இருவரும் டக் அவுட்டானாலும், ஜோஸ் பட்லரின் அரைசதம் (60) மற்றும் ஜேசன் ராய் (41), பென் ஸ்டோக்ஸ் (27), மொயின் அலி (34), லிவிங்ஸ்டோன் (27), ஓவர்டன் (32) ஆகியோரின் பங்களிப்புகளால் 259 ரன்கள் அடித்தது. 

இதையும் படிங்க - கோலி 70 சதங்களை கேண்டி கிரஷ் விளையாடியா அடிச்சாப்ள..? அவரு கிரேட் பிளேயர்.. அக்தர் அதிரடி

260 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானை ஒரு ரன்னில் வீழ்த்திய ரீஸ் டாப்ளி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் தலா 17 ரன்னில் வீழ்த்தினார். ஃபார்மில் இல்லை என்று விமர்சிக்கப்பட்டுவரும் விராட் கோலி, கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் நல்ல தரமான ஷாட்டுகளை நேர்த்தியாக ஆடி தொடங்கினார்.

இதையும் படிங்க - விராட் கோலியின் மற்றுமொரு சாதனையை தகர்த்தார் பாபர் அசாம்

நேர்த்தியான ஷாட்டுகளின் மூலம் 3 அருமையான பவுண்டரிகளை அடித்தார் கோலி. கோலி நல்ல டச்சில் தெரிந்ததால் இன்றாவது பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரீஸ் டாப்ளியின் பந்தில் விக்கெட்கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, 38 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. ரிஷப் பண்ட்டும் சூர்யகுமார் யாதவும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர்.