சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் விராட் கோலி. பேட்டிங்கில் பெரும்பாலான சாதனைகளை அடித்து காலி செய்துவிட்ட கோலி, மீதமிருக்கும் சாதனைகளையும் அவரது கெரியர் முடிவதற்குள் உடைத்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் கோலி, ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவந்த நிலையில், உலக கோப்பை தொடரில் விராட் கோலி எதிர்பாக்கப்பட்ட அளவிற்கு சோபிக்கவில்லை. வழக்கமாக அரைசதத்தை எளிதாக சதமாக மாற்றவல்ல கோலி, உலக கோப்பையில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்தும், அதில் ஒன்றைக்கூட சதமாக மாற்றவில்லை. 

உலக கோப்பை முடிந்து சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடாத கோலி, மூன்றாவது போட்டியில், இந்திய அணி முதல் 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். 

Also Read: நான் யாருனு யாருக்கும் நிரூபித்துக்காட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்ல.. கொந்தளித்த கோலி

உலக கோப்பையில் கோலி சாதனைகள் செய்யவில்லை என்றாலும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலிக்காக சாதனைகள் காத்திருக்கின்றன. 

1. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத் திகழ்கிறார். மியான்தத் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 1930 ரன்களை குவித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் 1912 ரன்களுடன் கோலி உள்ளார். எனவே கோலி இன்னும் 19 ரன்கள் அடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார். 

எப்பேர்ப்பட்ட தோனியை அசால்ட்டா தூக்கியடித்து சாதனை படைத்த ரிஷப் பண்ட்

2. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் ஹெய்ன்ஸுடன் கோலி பகிர்ந்துள்ளார். இருவருமே தலா 2 சதங்கள் அடித்துள்ளனர். கோலி இன்னும் ஒரு சதம் அடித்தால் அந்த சாதனையை முறியடித்துவிடுவார்.