லக்னோவில் சாதனை படைத்து மனைவிக்கு பர்த்டே ட்ரீட் கொடுக்க காத்திருக்கும் கிங் கோலி!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பாப் டூப்ளெசிஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 43 ஆவது போன்று இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோ மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டூப்ளெசிஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்த மைதானத்தில் முதலில் பேட்டிய அணி அதிகபட்சமாக லக்னோ அணி 193 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக 121 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுத்துள்ளது. இந்த மைதானத்தில் நடந்த 4 போட்டிகளில் லக்னோ அணி 2 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
டேவிட் வில்லிக்குப் பதிலாக களமிறங்கும் கிரிக்கெட் வர்ணனையாளர் கேதர் ஜாதவ்!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் கூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், குர்ணல் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), கிருஷ்ணப்பா கௌதம், ரவி பிஷ்னாய், நவீன் உல் ஹாக், அமித் மிஸ்ரா மற்றும் யாஷ் தாகூர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
விராட் கோலி, பாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேஷாய், வணிந்து ஹசரங்கா, கரண் சர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹசல்வுட்
இந்த மைதானத்தில் முதல் முறையாக விராட் கோலி பேட்டிங் செய்கிறார். இங்கு அவர் 43 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக 7000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார். ஆர்சிபி அணியில் ஹசல்வுட் மற்றும் அனுஜ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். அதே போன்று லக்னோ அணியில் ஆவேஷ் கானுக்குப் பதிலாக கிருஷ்ணப்பா கௌதம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் காயம் ஏற்பட்ட நிலையில், தற்போது குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்தியாவிலேயே சென்னை தோசைகள் தான் பெஸ்ட் - ஷாருக் கான்!
இன்று நடக்கும் போட்டியில் லக்னோ வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும். ஒருவேளை ஆர்சிபி வெற்றி பெற்றால் லக்னோ, சிஎஸ்கே, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகளுடன் சேர்ந்து 10 புள்ளிகள் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் நடந்த 3 போட்டிகளில் 2ல் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டியிலும் ஆர்சிபி அணி தான் முதலில் பேட்டிங் ஆடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் கடைசில வந்தாலும் சிக்ஸருக்கு மட்டும் பஞ்சமே இருக்காது: தோனியின் 20ஆவது ஓவர் ரெக்கார்டு!