என்னதான் கடைசில வந்தாலும் சிக்ஸருக்கு மட்டும் பஞ்சமே இருக்காது: தோனியின் 20ஆவது ஓவர் ரெக்கார்டு!
இதுவரையில் கடைசியாக 20 ஓவர்களில் மட்டும் 290 பந்துகளில் 790 ரன்கள் குவித்து தோனி சாதனை படைத்துள்ளார்.
எம் எஸ் தோனி
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் நடந்து வரும் நிலையில், இந்த ஆண்டும் நடந்து வருகிறது. ஆனால், என்ன இந்த ஆண்டில் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று ரசிகர்கள் கருதும் நிலையில், எந்தப் போட்டியாக இருந்தாலும் தோனிக்காகவே மஞ்சள் நிற ஜெர்சியில் ரசிகர்கள் ஒவ்வொரு போட்டிக்கும் வருகின்றனர்.
எம் எஸ் தோனி
அதுமட்டுமின்றி தனது கடைசி ஐபிஎல் என்பதற்காகவே ஒவ்வொரு போட்டியிலும் தோனி கவனமாகவே விளையாடி வருகிறார். எப்படியாவது இந்த ஆண்டு டிராபியை கைப்பற்றியே தீர வேண்டும் என்று விளையாடி வருகிறார்.
எம் எஸ் தோனி
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 41ஆவது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய சென்னை அணியில் கான்வே 92 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
எம் எஸ் தோனி
ருத்துராஜ் கெய்க்வாட் 37 ரன்களில் வெளியேறினார். ஷிவம் துபே 28 ரன்கள் சேர்த்தார். மொயீன் அலி 10 ரன்னும், ஜடேஜா 12 ரன்னும் எடுத்தனர். கடைசியாக வந்த தோனி 2 சிக்ஸர்கள் விளாச இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.
எம் எஸ் தோனி
கடைசியாக வந்த தோனி 4 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உள்பட 12 ரன்கள் சேர்த்தார். இதுவரையில் தோனி ஆடிய போட்டிகளில் கடைசியாக 20 ஆவது ஓவரில் மட்டுமே இதுவரையில் 290 பந்துகளை சந்தித்துள்ளார். அதில், 790 ரன்கள் குவித்துள்ளார். இதில், 59 சிக்ஸர்களும், 49 பவுண்டரிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.