ஐபிஎல் 16வது சீசனில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களுரூ சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் டிம் டேவிட், கேமரூன் க்ரீன், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய 3 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே ஆடுகிறது. 4வது வெளிநாட்டு வீரரை இம்பேக்ட் பிளேயராக ஆடவைக்கும் முனைப்பில், ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியுள்ள ஜேசன் பெஹ்ரண்டார்ஃபை இம்பேக்ட் பிளேயராக எடுத்துள்ளது மும்பை அணி. மும்பை இந்தியன்ஸ் அணி 2வதாக பந்துவீசுவதால் பெஹ்ரண்டார்ஃபை இம்பேக்ட் பிளேயராக எடுத்துள்ளது. 2வது இன்னிங்ஸில் தேவைப்பட்டால் அவரை பயன்படுத்திக்கொள்ளலாம். இது மும்பை அணிக்கு பலம் சேர்க்கும். பும்ரா இல்லாத குறையை ஆர்ச்சர் தீர்க்கிறார்.
IPL 2023: இந்தியாவின் முதல் பவுலர்.. டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சாஹல்
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நெஹல் வதெரா, ரித்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா, அர்ஷத் கான்.
இம்பேக்ட் பிளேயர்கள் - ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், விஷ்ணு வினோத், ஷாம்ஸ் முலானி, சந்தீப் வாரியர், ராமன் தீப் சிங்.
ஆர்சிபி அணி:
விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), க்ளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கரன் ஷர்மா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்ளி, முகமது சிராஜ்.
IPL 2023: டெல்லி கேபிடள்ஸின் தோல்விக்கு இதுதான் காரணம்..! பிளேயர்ஸ் மீது ரிக்கி பாண்டிங் செம காட்டம்
இம்பேக்ட் பிளேயர்கள் - அனுஜ் ராவத், சுயாஷ் பிரபுதேசாய், மஹிபால் லோம்ரார், சோனு யாதவ், டேவிட் வில்லி.
