2வது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் ஒரு ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஜடேஜாவின் சுழலில் வெறும் 113 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி 114 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா மற்றும் மற்றும் மிடில் ஆர்டர் வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகிய இருவர் மட்டுமே நன்றாக ஆடினர். உஸ்மான் கவாஜா 81 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களும் அடித்தனர். கம்மின்ஸ் 33 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இவரை விட்டால் இந்தியாவில் வேற திறமையான வீரரே இல்லையா..? கேஎல் ராகுல் தேர்வை கடுமையாக விளாசிய வெங்கடேஷ் பிரசாத்

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஷமி 4 விக்கெட்டுகளும், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் நேதன் லயனிடம் சரணடைந்தது. ரோஹித் சர்மா(32), கேஎல் ராகுல்(17), புஜாரா(0), ஷ்ரேயாஸ் ஐயர்(4) மற்றும் கேஎஸ் பரத் (6) ஆகிய 5 வீரர்களையும் நேதன் லயன் வீழ்த்தினார். கோலி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 44 ரன்கள் அடித்தார். 139 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. அதன்பின்னர் அக்ஸர் படேல் மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 8வது விக்கெட்டுக்கு 114 ரன்களை குவித்தனர். அஷ்வின் 37 ரன்கள் அடித்தார். மிகச்சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த அக்ஸர் படேல் 74 ரன்களை அடிக்க, அவரது பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களை குவித்தது. 

ஒரு ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி 43 ரன்கள் அடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய லபுஷேன் 35 ரன்கள் அடித்தார். அவர்கள் இருவரைத்தவிர மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்திற்கு மளமளவென ஆட்டமிழந்தனர். ஜடேஜாவின் சுழலை சமாளிக்க முடியாமல் கவாஜா(6), லபுஷேன் (35), ஹேண்ட்ஸ்கோம்ப், கேரி, கம்மின்ஸ், லயன், குன்னெமன் ஆகிய 7 வீரர்கள் ஜடேஜாவின் சுழலில் அவுட்டாக, வெறும் 113 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மகளிர் டி20 உலக கோப்பை: ஸ்மிரிதி மந்தனாவின் போராட்ட அரைசதம் வீண்..! இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 114 ரன்கள் முன்னிலை பெற, 115 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணி விரட்டுகிறது. இது மிக எளிய இலக்கு என்பதால் இந்த இலக்கை அடித்து இந்திய அணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.