ரோகித் சர்மா, விராட் கோலி ஏன் இல்லை? சீக்ரெட்டை உடைத்த அஸ்வின்!
கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 போட்டிகளில் இடம் பெறுவதில்லை.
ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 வரும் அக்டோபர் 5 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடர் என்பதால், இந்த முறை உலகக் கோப்பை தொடரை இந்தியா கைப்பற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாக மூத்த வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Ireland vs India 3rd T20: டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணியில் மாற்றம் செய்யப்படுமா?
உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக வரும் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை 2023 தொடர் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், டி20 போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் விலகியதற்கான காரணங்கள் குறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
FIDE World Cup Final 2023: டிரா ஆன முதல் சுற்று இறுதிப் போட்டி: டிராபியை கைப்பற்றுவாரா பிரக்ஞானந்தா?
கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறிய பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர்களது கவனம் முழுவதும் தற்போது உலகக் கோப்பை பக்கம் திரும்பியுள்ளது.
நிலவில் தரையிறங்கும் சந்திரயான் – 3; வெற்றி பெறுவாரா பிரக்ஞானந்தா?
நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா இழந்தது. இதையடுத்து தற்போது அயர்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றிய நிலையில், இன்று 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நடக்கிறது. "50 ஓவர்களில் இருந்து 20 ஓவர்கள் வரை, மனநிலையில் முழுமையான மாற்றம் உள்ளது. இருவரும் 50 ஓவர் உலகக் கோப்பைக்குத் தயாராவது நல்ல முடிவு” என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.