CWC 2023: 48 ஆண்டுகால வரலாற்றில் 2ஆவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி கோலி, அஸ்வின் சாதனை படைப்பார்களா?

இந்தியா உலகக் கோப்பையை வென்றால், 48 ஆண்டுகால வரலாற்றில் இரண்டு முறை ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற ஒரே இந்தியர்கள் என்ற சாதனையை விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரும் படைப்பார்கள்.

Ravichandran Ashwin and Virat Kohli Ready to Make A history after 48 Years in Cricket World Cup 2023 rsk

இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் நடக்க இருக்கிறது. வரும் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் இடம் பெற்று 45 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன. அதன் பிறகு 2 அரையிறுதிப் போட்டி மற்றும் ஒரு இறுதிப் போட்டி என்று மொத்தமாக 48 போட்டிகள் நடத்தப்படுகிறது. சென்னை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, அகமதாபாத் என்று 10 மைதானங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.

ஆசிய விளையாட்டு 2023.. ஆண்களுக்கான 10000 மீட்டர் ஓட்டப்பந்தயம் - வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற இந்தியா!

அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 8 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. இதையடுத்து, அக்டோபர் 11ஆம் தேதி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கிறது.

மீண்டும் அப்பாவாகும் விராட் கோலி – கர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா?

மேலும், அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இது ஒரு புறம் இருக்க ஏற்கனவே உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அக்‌ஷர் படேல் இடம் பெற்றிருந்த நிலையில், அவர் காயம் காரணமாக நீக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.

2019 உலகக் கோப்பையில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர்கள்:

விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளனர்.

2015 உலகக் கோப்பையில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர்கள்:

விராட் கோலி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், முகமது ஷமி ஆகியோர் இந்த உலகக் கோப்பையிலும் இடம் பெற்றிருந்தனர். ஆனால், அக்‌ஷர் படேல் நீக்கப்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.

2011 உலகக் கோப்பையில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர்கள்:

விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்….

கடந்த 2011 ஆம் ஆண்டு தான் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. இதில், விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில், தான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா 13ஆவது உலகக் கோப்பையை கைப்பற்றினால், விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரும் தான் 48 ஆண்டுகால வரலாற்றில் இரண்டு முறை ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற ஒரே இந்தியர்கள் என்ற சாதனையை படைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானை வீழ்த்தி ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற இந்தியா!

கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. முதன் முதலாக ரவிச்சந்திரன் அஸ்வின் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடினார். இதில், இந்தியா டிராபியை கைப்பற்றி வரலாறு படைத்தது. அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடினார். இதில், இந்தியா 2ஆவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. ஆனால், 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அஸ்வின் இடம் பெறவில்லை.

நேற்று தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் போட்டி என்றால், இன்று இந்தியா – இங்கிலாந்து போட்டி ரத்து!

இதில், இந்தியா முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது. தற்போது 37 வயதாகும் அஸ்வின் அடுத்து 2027 ஆம் ஆண்டு நடக்க உள்ள கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்பேனா என்பது குறித்து தெரியாது. ஆனால், இந்த உலகக் கோப்பையில் இடம் பெறுவேன் என்பதை நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆகையால், இந்த உலக் கோப்பை தொடரை மகிழ்ச்சியோடு விளையாடுவேன் என்று கூறியிருக்கிறார்.

ஆசிய விளையாட்டு 2023: கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா-ருதுஜா ஜோடி வெற்றி; இந்தியாவிற்கு 9ஆவது தங்கம்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios