பாகிஸ்தானை வீழ்த்தி ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற இந்தியா!
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஆண்களுக்கான ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது.

சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில், இன்று நடந்த ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், இந்தியா 12-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தங்கம் வென்றது. ஆனால், 2014 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்தியா டாப்பில் வந்தது. 2018 ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
மழையால் போட்டி தாமதம்: டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு!
இன்று நடந்த இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மாறி மாறி கோல் அடிக்கவே, ஒரு கட்டத்தில் அபய் சிங் 7-9 என்று பின் தங்கியிருந்தார். அதன் பிறகு 11-9 என்று வெற்றி பெற்றார். முதலில் பாகிஸ்தான் 2-0 என்று முன்னிலையில் இருந்த நிலையில் கடைசியாக இந்தியா 12-10 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி 10ஆவது தங்கத்தை கைப்பற்றியது. இதன் மூலமாக இந்தியா 10 தங்கம், 13 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என்று 36 பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் 5 ஆவது இடம் பிடித்துள்ளது.
IND vs ENG Warm Up Match: 4ஆவது வார்ம் அப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து பலப்பரீட்சை!