Asianet News TamilAsianet News Tamil

மழையால் போட்டி தாமதம்: டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு!

இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது வார்ம் அப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

India Won the toss and choose to bat first against England in Cricket World Cup Warm Up Match at Guwahati rsk
Author
First Published Sep 30, 2023, 2:27 PM IST

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 5 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இத்தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் வார்ம் அப் போட்டியில் விளையாடி வருகின்றன. நேற்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலாக நடந்த முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான வார்ம் அப் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

IND vs ENG Warm Up Match: 4ஆவது வார்ம் அப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து பலப்பரீட்சை!

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியில், நியூசிலாந்து அபாரமாக வெற்றி பெற்றது. இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது வார்ம் அப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளுமே வலுவான அணிகள். இங்கிலாந்து நடப்பு சாம்பியன் என்றால், இந்தியா இந்த உலகக் கோப்பை தொடரை நடத்தும் அணி. இரு அணிகளுமே ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றிய நிலையில், உலகக் கோப்பைக்குள் எண்ட்ரி கொடுக்கின்றன. இரு அணிகளும் தலா 106 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா 57 போட்டிகளிலும், இங்கிலாந்து 44 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

Cricket World Cup 2023: ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை 2023க்கான 10 அணி வீரர்கள்!

இதுவே ஹோம் மைதானங்களில் 33 போட்டிகளிலும், அவே மைதானங்களில் 18 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று இங்கிலாந்து 23 ஹோம் மைதான போட்டிகளிலும், 17 அவே மைதான போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், உலகக் கோப்பையில் மட்டுமே நடந்த 8 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 3 போட்டியிலும், இங்கிலாந்து 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி மட்டுமே டையில் முடிந்துள்ளது.

90மீ தூரத்திற்கு 8 ரன்களும், 100 மீட்டர் தூரம் சிக்ஸ் அடித்தால் 10 ரன்களும் கொடுக்கணும் – ரோகித் சர்மா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றியது. இதே போன்று நியூசிலாந்திற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 3-1 என்று கைப்பற்றியது. இந்த நிலையில் தான் கவுகாத்தி மைதானத்தில் இன்று நடக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான வார்ம் அப் போட்டியானது மழையின் காரணமாக தாமதமாக தொடங்கப்படுகிறது.

CWC, NZ vs PAK: பாகிஸ்தானை பந்தாடிய நியூசிலாந்து – வார்ம் அப் போட்டியில் ருத்ரதாண்டம் ஆடிய நியூ., வீரர்கள்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த வார்ம் அப் போட்டியானது, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதோடு, டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios