ஆசிய விளையாட்டு 2023.. ஆண்களுக்கான 10000 மீட்டர் ஓட்டப்பந்தயம் - வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற இந்தியா!
சீனாவின் உள்ள ஹாங்சோவில் தற்போது 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில், இன்று நடந்த ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டியில் இரு இந்தியா வீரர்கள் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளனர்.
இன்று செப்டம்பர் 30ம் தேதி சீனாவில் நடந்த ஆடவருக்கான 10,000 மீட்டர் ஒட்டப்பந்தையத்தின் இறுதிப்போட்டியில் கார்த்திக் குமார் இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தையும் மற்றொரு இந்திய வீரரான குல்வீர் சிங் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கத்தையும் பெற்று இந்தியாவிற்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தேடித்தந்துள்ளனர்.
அதே போல ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று நடந்த ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், இந்தியா 12-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் அப்பாவாகும் விராட் கோலி – கர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா?
ஆனால், கடந்த 2014ம் ஆண்டு நடந்த போட்டியில் இந்தியா டாப்பில் வந்தது. 2018 ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்திய டென்னிஸ் ஜோடியான ரோஹன் போபண்ணா மற்றும் ருதுஜா போசலே ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றதை அடுத்து, ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் குழு ஸ்குவாஷ் போட்டியில், பரபரப்பான சண்டையில், பாகிஸ்தானை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்த இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது.
மேலும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் மற்றும் திவ்யா டிஎஸ் ஆகியோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீன ஜோடியிடம் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளனர். இறுதி ஸ்கோர் 16-14 என்ற கணக்கில் சீன துப்பாக்கி சுடுதல் வீரர்களான ஜாங் போவன் மற்றும் ஜியாங் ரான்க்சின் ஆகியோர் தங்கத்திற்கான ஷூட்-ஆஃப் போட்டியில் வெற்றி பெற்றனர்.
இதன்மூலம் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 6 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றுள்ளது. இந்திய வீரர் சரப்ஜோத் 291 ரன்களை எடுத்தார், அதே நேரத்தில் திவ்யா 286 ரன்களை குவித்து மொத்தமாக 577 ரன்களை குவித்து தகுதிச் சுற்றில் சீனாவை (576) முந்தினார். ஆனால் தங்கத்திற்கான ஷூட்-ஆஃப் போட்டியில், சீன ஜோடி இந்திய ஜோடியை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றது.
பாகிஸ்தானை வீழ்த்தி ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற இந்தியா!