IPL 2023: RR vs CSK போட்டி டாஸ் ரிப்போர்ட்..! ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு அதிர்ச்சி மாற்றம்
ஐபிஎல் 16வது சீசனில் சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று ஜெய்ப்பூரில் நடக்கும் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சிஎஸ்கே மற்றும் 3ம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகளும் மோதுகின்றன.
இந்த சீசனில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுமே அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகின்றன. 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ள சிஎஸ்கே மற்றும் 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகளுமே வெற்றி வேட்கையுடன் இந்த போட்டியில் களமிறங்குகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலர் டிரெண்ட் போல்ட்டுக்கு பதிலாக ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஜேசன் ஹோல்டருக்கு பதிலாகத்தான் ஸாம்பா ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் ஓவரில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்துவரும் டிரெண்ட் போல்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். டிரெண்ட் போல்ட் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். காயம் இல்லையென்றால் அவர் நீக்கப்பட்டிருக்க மாட்டார்.
சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் சிஎஸ்கே அணி களமிறங்கியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், த்ருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், ஆடம் ஸாம்பா, யுஸ்வேந்திர சாஹல்.
IPL 2023: டி20 கிரிக்கெட்டில் தனித்துவமான சாதனைகளை படைத்த விராட் கோலி
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பதிரனா, ஆகாஷ் சிங்.