ஐபிஎல் 12 சீசன்கள் முடிந்து, 13வது சீசன் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் நெருங்கிவிட்ட நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரிய அதிர்ச்சி ஒன்று வந்து சேர்ந்துள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், பட்லர், உனாத்கத், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய மிகச்சில வீரர்களையே அதிகமாக சார்ந்துள்ளது. இவர்களில் பட்லர், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பலமாக திகழ்கிறார்கள்.

இந்நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல்லில் ஆடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமான ஆர்ச்சர், 2018 மற்றும் 2019 ஆகிய இரண்டு சீசன்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர பவுலராக திகழ்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்து, அந்த அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்தார். 

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜனவரி மாதம் டெஸ்ட் போட்டியில் ஆடும்போது, முழங்கையில் காயம் ஏற்பட்டதால், அத்துடன் அந்த தொடரிலிருந்து விலகி சிகிச்சை பெற்றுவந்தார் ஆர்ச்சர். அவர் வேகமாக குணமாகிவருகிறார் என்ற தகவல் வந்தது. ஆனால் அவருக்கு ஏப்ரல் மாத மத்தியில் மீண்டும் ஸ்கேன் செய்ய வேண்டியிருப்பதாகவும், அவர் இங்கிலாந்துக்கு ஆடுவதே முக்கியம் என்பதால், ஓய்வில் இருக்க வேண்டியிருப்பதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான ஃபார்மட்டுகளிலும் நட்சத்திர வீரர்களாக திகழும் மிகச்சிலரில் ஆர்ச்சரில் ஒருவர். அவர் தொடர்ச்சியாக அனைத்து விதமான போட்டிகளிலும் இங்கிலாந்து அணிக்காக ஆடிவந்த நிலையில், அதிகமான வேலைப்பளுவின் தாக்கமாக கூட காயம் அடைந்திருக்கலாம். எனவே காயத்திலிருந்து மீண்டுவரும் ஆர்ச்சர், அடுத்ததாக ஜூன் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் ஆடவேண்டும்.

எனவே இதற்கிடையே ஐபிஎல்லில் ஆடுவது அவரது உடற்தகுதியை சிதைக்கும் வாய்ப்புள்ளது. எனவே ஐபிஎல்லில் அவர் ஆடமாட்டார் என்பதை பறைசாற்றும் விதமாக, ஆர்ச்சர் இங்கிலாந்து அணிக்கு ஆடுவதே முக்கியம் என்ற ஸ்டேட்மெண்ட்டை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆர்ச்சரின் உடற்தகுதியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக்குழு கண்காணித்துவருவதாகவும் அவருக்கு ஏப்ரல் மத்தியில் ஸ்கேன் செய்ய வேண்டியிருப்பதால், அவர் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

Also Read - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணியில் 2 வீரர்கள் சர்ப்ரைஸ் தேர்வு..?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, டேவிட் மில்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், மஹிபால் லோம்ரார், மனன் வோரா, ரியான் பரக், அங்கிட் ராஜ்பூத், மயன்க் மார்கண்டே, ஷ்ரேயாஸ் கோபால், வருண் ஆரோன், ஜெய்தேவ் உனாத்கத், கார்த்திக் தியாகி, ஆகாஷ் சிங், ஒஷேன் தாமஸ், ஆண்ட்ரூ டை, ராகுல் டெவாட்டியா, ஷேஷான்க் சிங், அனிருதா ஜோஷி, டாம் கரன், அனுஜ் ராவட். 

Also Read - சேவாக் அதிரடி அரைசதம்.. வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸை வீழ்த்தி இந்தியா லெஜண்ட்ஸ் அபார வெற்றி