IND vs AUS 2nd ODI: பகலில் 80 சதவிகித வாய்ப்பு: ஆமா, இடியுடன் கூடிய மழை பெய்யுமாம்: போட்டி என்னாகும்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டியின் போது மழை வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியனானது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நாளை ஆந்திரா மாநிலம் விசாப்பட்டினத்தில் பகல் - இரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.
முதல் ஒரு நாள் போட்டியில் ஓய்வில் இருந்த ரோகித் சர்மா, இந்தப் போட்டியில் விளையாடுகிறார். ஆனால், கோடை காலமான இந்த மாதத்தில் பல மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பகலில் கன மழை கொட்டி தீர்த்தது. ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நாளை இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை - ராம் சரண் ஓபன் டாக்!
குறிப்பாக விசாகப்பட்டினத்தில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாகப்பட்டினம் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூறியிருப்பதாவது: தண்ணீர் வெளியேறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மழை பெய்து நின்று விட்டால் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போட்டி தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். முழு மைதானத்தையும் மழையால் நனைந்து விடாமல் இருக்க தார்பாய் கொண்டு மூடியுள்ளோம்.
எனினும், மழை நின்றால் மட்டுமே போட்டியை எங்களால் தொடங்க முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனால், 2ஆவது ஒரு நாள் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பகலில் மழை பெய்ய 80 சதவிகித வாய்ப்புள்ள நிலையில், இந்தப் போட்டி 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறாது என்று கருதப்படுகிறது. ஒருவேளை மழை பெய்யாவிட்டால் போட்டியில் எந்த பாதிப்பும் இல்லை.
- Australia ODI
- Hardik Pandya
- IND vs AUS Visakhapatnam
- IND vs AUS Visakhapatnam Weather
- IND vs AUS Visakhapatnam Weather LIVE
- IND vs AUS Vizag ODI
- Ind vs Aus
- Ind vs Aus 2nd ODI
- India vs Australia
- India vs Australia 2nd ODI
- Ishan Kishan
- Rohit Sharma
- Visakhapatnam ODI LIVE
- Visakhapatnam Weather LIVE
- Visakhapatnam Weather Report