ENG vs IND: வெறும் சதத்தை மட்டும் பார்க்காதீங்க..! விராட் கோலிக்கு முட்டு கொடுக்கும் ராகுல் டிராவிட்

இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்காமல் திணறிவரும் விராட் கோலிக்கு ஆதரவாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.
 

rahul dravid backs virat kohli even he is not scoring hundreds for 2 and half years ahead of england vs india test

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்தவர். சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசிய விராட் கோலி, இரண்டரை ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கமுடியாமல் திணறிவருகிறார்.

கடைசியாக 2019 நவம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் சதமடித்த விராட் கோலி, அதன்பின்னர் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இந்த காலக்கட்டத்தில் இந்திய அணியின் வெற்றிகளில் பல முக்கியமான பங்களிப்பு செய்துள்ள விராட் கோலி, சதம் மட்டும் அடிக்கவில்லை.

இதையும் படிங்க - ENG vs IND: டெஸ்ட்டில் ரோஹித் ஆடுவது சந்தேகம்! கேப்டன் பும்ரா.. கபில் தேவுக்கு அடுத்து பும்ரா தான்.. செம சாதனை

ஆனால் விராட் கோலியின் தரத்திற்கு அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது சதம் தான். ஏனெனில் ஏற்கனவே செட் செய்துள்ள பென்ச் மார்க் அந்தளவிற்கு உயர்ந்தது.  அதனால் அவரிடமிருந்து சதம் வரவில்லை என்பது ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இந்திய அணிக்கும் அது  பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க - ENG vs IND: அவனுங்க எப்படி ஆடுனா எங்களுக்கென்ன.? அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல - செம கெத்தா பேசிய ராகுல் டிராவிட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் வெள்ளைப்பந்து தொடர்களில் விராட் கோலி மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி ஜூலை1ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. 

இந்நிலையில், விராட் கோலி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், எப்போதுமே சதத்தில் கவனம் செலுத்தக்கூடாது. கேப்டவுனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் கோலி அடித்த 79 ரன்கள் மிக முக்கியமானது. அருமையான இன்னிங்ஸ் அது. அதை கோலி சதமாக மாற்றவில்லை என்றாலும், அந்த இன்னிங்ஸ் மிகச்சிறப்பானது. விராட் கோலி அவரது தரத்தை மிக உயர்வாக செட் செய்திருப்பதால் அவரிடமிருந்து சதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால் பயிற்சியாளர்கள் பார்வையில், 50-60 என விராட் கோலியிலிருந்து அணியின் வெற்றிக்கு தேவையான பங்களிப்புகளே போதுமானது. அதுவே முக்கியமானதும் கூட என்று ராகுல் டிராவிட் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள்! சேவாக்கின் தேர்வில் கோலிக்கு இடம் இல்ல

விராட் கோலியின் 71வது சதம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலக கோப்பையும் நெருங்கிவருவதால், விராட் கோலியின் ஃபார்ம் இந்திய அணிக்கு மிக முக்கியமானது.அந்தவகையில், இந்த இங்கிலாந்து தொடர் விராட் கோலி மிக முக்கியமானது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios