5 பவுண்டரி, 5 சிக்ஸர் விளாசி அதிரடி காட்டிய ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன்; புனேரி பாப்பா டீம் வெற்றி!

மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான புனேரி பாப்பா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Puneri Bappa won by 8 wickets against Kolhapur Tuskers, Match 1 in MPL 2023

ஐபிஎல் என்று சொல்லப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் போன்று மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் சார்பில் மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடர் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 15 ரவுண்ட்  ராபின் போட்டிகள், 2 தகுதிச் சுற்று, ஒரு எலிமினேட்டர் மற்றும் ஒரு இறுதிப் போட்டி என்று மொத்தம் 19 போட்டிகள் நடைபெறுகிறது.

அவை:

  1. புனேரி பாப்பா – ருதுராஜ் கெய்க்வாட்
  2. ஈகிள் நாசிக் டைட்டன்ஸ் – ராகுல் திரிபாதி
  3. கோலாப்பூர் டஸ்கர்ஸ் – கேதர் ஜாதவ்
  4. சத்ரபதி சம்பாஜி கிங்ஸ் - ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்
  5. ரத்னகிரி ஜெட்ஸ் - அசீம் ஹாசி
  6. சோலாப்பூர் ராயல்ஸ் – விக்கி ஓஸ்ட்வால்

டிடி ஸ்போர்ட்ஸ் மற்றும் ஃபேன்கோடு ஆப் ஆகியவற்றில் மகாராஷ்டிரா பிரீமியர் லீக் தொடரை நேரடியாக பார்க்கலாம். எம்பிஎல் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.25 லட்சமும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

MPL 2023: ரூ.14.8 கோடிக்கு வாங்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட்; புனே அணிக்கு கேப்டனாக நியமனம்!

இந்த தொடரின் முதல் போட்டி நேற்று புனேயில் நடந்தது. இதில், புனேரி பாப்பா அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, கேதர் ஜாதவ்வின் கோலாப்பூர் டஸ்கர்ஸ் அணி பேட்டிங் ஆடியது. இதில் கேதர் ஜாதவ் 25 ரன்னிலும், அங்கீத் பாவ்னே 72 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதிரடியாக ஆடிய பாபா அபராஜித் – சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 2ஆவது வெற்றி!

இறுதியாக கோலாப்பூர் டஸ்கர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்து வீச்சில் புனே அணி சார்பில் சச்சின் போஸ்லே மற்றும் பியூஷ் சால்வி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து ஆடிய புனேரி பாப்பா அணியில் பவன் ஷா 57 ரன்னிலும், ருதுராஜ் கெய்க்வாட் 64 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த சுராஜ் ஷிண்டே மற்றும் யாஷ் சிர்ஷாகர் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தனர்.

கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய வெங்கடேஷ் ஐயர்: வைரலாகும் வீடியோ!

இந்தப் போட்டியில் புனேரி பாப்பா அணி 14.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி 27 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் விளாசி 64 ரன்கள் சேர்த்த ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று பிற்பகல் 2 மணிக்கு நடக்கும் போட்டியில் ஈகிள் நாசிக் டைட்டன்ஸ் அணியும், சத்ரபதி சம்பாஜி கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. வரும் 29 ஆம் தேதி எம்பிஎல் தொடரின் இறுதிப் போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நின்னு, நிதானமாக ஆடிய விஜய் சங்கர்; 20 ஓவருக்கு 120 ரன்கள் எடுத்த ஐடீரீம் திருப்பூர் தமிழன்ஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios