Asianet News TamilAsianet News Tamil

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் ரேங்கிங் பட்டியலில் முன்னேறிய சுப்மன் கில், புஜாரா, ஷ்ரேயாஷ் ஐயர்!

இந்திய அணியின் புஜாரா, குல்தீப் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

Pujara, Iyer, gill and kuldeep yadav are gains in icc mens test player ranking list
Author
First Published Dec 21, 2022, 3:51 PM IST

நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஐசிசி ஆண்களுக்கான டெஸ்ட் பேட்டிங் ரேங்கிங் பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். புஜாரா 10 இடங்கள் முன்னேறி 16ஆவது இடம் பிடித்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் 11 இடங்கள் முன்னேறி 26ஆவது இடம் பிடித்துள்ளார். சுப்மன் கில் 10 இடங்கள் முன்னேறி 54 ஆவது இடம் பிடித்துள்ளார்.

அணியை வலுப்படுத்த 6 வீரர்களை அறிமுகம் செய்தோம்: எல்லாவற்றிற்கும் நானே பொறுப்பு - வேதனையுடன் பாபர் அசாம்!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து 2ஆவது இடத்தில் நீடிக்கிறார். ஒரு நாள் ரேங்கிங் பட்டியலில் முதலிடமும், டி20யில் 4ஆவது இடமும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ட்ரேவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் அடித்து 3 இடங்கள் முன்னேறி 4ஆவது இடம் பிடித்துள்ளார். மேலும், டெஸ்ட் வரலாற்றிலேயே முதல் முறையாக 800 ரேட்டிங் பாய்ண்ட் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த ஜனவரியில் 5ஆவது இடம் பிடித்திருந்தார். 

IND vs BAN 2nd Test: வங்கதேசத்தை ஒயிட் வாஷ் ஆக்கும் முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிர வலைபயிற்சி!

இதே போன்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 23 ஆவது இடம் பிடித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த 3 டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்த இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் முதல் முறையாக 50 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் தெம்பா பவுமா 8 இடங்கள் முன்னேறி 24 ஆவது இடம் பிடித்துள்ளார். வங்கதேச அணியின் கேப்டன் ஷகில் அல் ஹசன் 4 இடங்கள் முன்னேறி 37 ஆவது இடம் பிடித்துள்ளார்.

இதே போன்று பந்து வீச்சில் கஜிகோ ரபாடா 4 இடங்கள் முன்னேறி 3ஆவது இடம் பிடித்துள்ளார். எப்போதும் டாப்பில் இருக்கும் ரபாடா கடந்த ஆகஸ்ட் ரேங்கிங் பட்டியலில் சரிவடைந்துள்ளார். தற்போது 3ஆவது இடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் குல்தீப் யாதவ் 10 இடங்கள் முன்னேறி 18ஆவது இடம் பிடித்துள்ளார்.

உலகக் கோப்பையை கையில் வைத்துக் கொண்டே படுத்து தூங்கிய மெஸ்ஸி: வைரலாகும் புகைப்படம்!

Follow Us:
Download App:
  • android
  • ios