Asianet News TamilAsianet News Tamil

உலகக் கோப்பையை கையில் வைத்துக் கொண்டே படுத்து தூங்கிய மெஸ்ஸி: வைரலாகும் புகைப்படம்!

அர்ஜெண்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி உலகக் கோப்பையை கையிலேயே வைத்துக் கொண்டு படுத்து தூங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Lionel Messi instagram post goes viral in social media
Author
First Published Dec 21, 2022, 1:06 PM IST

கத்தாரில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி வாகை சூடியது. இந்த வெற்றியின் மூலமாக 3ஆவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 1978 ஆம் ஆண்டும், 1986 ஆம் ஆண்டும் உலகக் கோப்பையை கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2022ம் ஆண்டில் விளையாட்டுலகை சோகத்தில் ஆழ்த்திய மரணங்கள்

கடந்த 1986 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையை மரடோனா அர்ஜ்னெடினா அணிக்காக பெற்றுக் கொடுத்தார். இதையடுத்து, 36 ஆண்டுகளுக்குப் பிறகு லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து, வெற்றி கோப்பையுடன் அர்ஜெண்டினா அணியினர் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.

மெஸ்ஸி மட்டும் இந்தியாவில் பிறந்திருந்தால்.... வழக்கம்போலவே சேவாக் குசும்பான பதிவு..! ரசிகர்கள் தக்க பதிலடி

அவர்களுக்கு மிகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த உலகக் கோப்பையை வென்றதன் மூலமாக மெஸ்ஸியின் கனவு நனவாகிவிட்டது. இந்த நிலையில், தனது 30 ஆண்டு கால பயணத்தை குறிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது 6ஆவது வயதில் கால்பந்து விளையாட ஆரம்பித்தது முதல் தற்போது உலகக் கோப்பையை வென்றது வரையில் உள்ள அத்தனை அம்சங்களும் இருக்கும் வகையில் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும், மறைந்த டியாகோ மரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். மெஸ்ஸியின் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

INDW vs AUSW: கார்ட்னெர், கிரேஸ் காட்டடி அரைசதம்.. இந்தியாவிற்கு கடின இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலிய மகளிர் அணி

இது ஒரு புறம் இருக்க அர்ஜெடிணா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி உலகக் கோப்பையை கையிலேயே வைத்துக் கொண்டு படுத்து தூங்கிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Leo Messi (@leomessi)

 

Follow Us:
Download App:
  • android
  • ios