லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் பிறந்திருந்தால் ஃபிஃபா உலக கோப்பை வெற்றிக்கு பிறகு அவருக்கு காவல்துறையில் வேலை வழங்கப்பட்டிருக்கும் என்று வீரேந்திர சேவாக் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு  செம வைரலாகிவருகிறது. 

கத்தாரில் நடந்த 22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையை அர்ஜெண்டினா அணி வென்றது. ஃபிரான்ஸுக்கு எதிரான பரபரப்பான இறுதிப்போட்டி டிராவான நிலையில், பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் ஃபிரான்ஸை வீழ்த்தி அர்ஜெண்டினா உலக கோப்பையை வென்றது.

1978 மற்றும் 1986ம் ஆண்டுகளுக்கு பிறகு 3வது முறையாக ஃபிஃபா உலக கோப்பையை வென்றது அர்ஜெண்டினா அணி. இந்த உலக கோப்பையை வென்றதன்மூலம், லியோனல் மெஸ்ஸியின் வாழ்நாள் கனவும் நனவானது. 

விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடாதீங்க.. கேப்டன்சியில் பாபர் பெரிய ஜீரோ.. கேப்டனுக்கு தகுதியே இல்லாத வீரர்

ஃபிஃபா உலக கோப்பையை வென்றதற்கு பிறகு பேசிய லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து ஆடப்போவதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஃபிஃபா உலக கோப்பை வெற்றியை அர்ஜெண்டினாவுடன் சேர்த்து அர்ஜெண்டினா மற்றும் மெஸ்ஸி ரசிகர்களும் கொண்டாடிவரும் நிலையில், வீரேந்திர சேவாக்கின் குசும்பான டுவீட் வழக்கம்போலவே செம வைரலாகிவருகிறது.

IPL Mini Auction 2023:எந்தஅணிக்கு கேப்டன் தேவை? ஏலத்தில் இடம்பெற்றுள்ள கேப்டன்சிக்கான வீரர்கள் யார்? ஓர் அலசல்

மெஸ்ஸி மட்டும் இந்தியாவில் பிறந்திருந்தால் அவருக்கு இந்நேரம் காவல்துறையில் பணி வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் என்று கிண்டலாக பதிவிட, அதைக்கண்ட ரசிகர்கள் மெஸ்ஸி மட்டும் இந்தியாவில் பிறந்திருந்தால் அவருக்கு ஆடுவதற்கு வாய்ப்பே கிடைத்திருக்காது என்று பதிலடி கொடுத்தார். 

View post on Instagram